பக்கம் எண் :

1190சித்தாந்த சாத்திரம் - சங்கற்பநிராகரணம்

105 விளங்கிய பிரம விளையாட் டாயின்
அவித்தை யென்பதொன் றன்னியந் தன்னில்
உதிக்கு மென்றமுன் உரையும் மறந்தனை
110 நுண்ணூற் குடம்பை நுந்துழி போல்உட்
படுநெறி அதனால் விடுநெறி இலதால்
தலைமையும் அறிவும் இலதென் அவித்தையை
விடுத்தெடுத் தாணரும் வேற்றோ ரன்றே
ஒளிகொள் தாமிரங் குளிகைபெற் றாங்கதன்

அவித்தை தற் கவித்தல் விளங்கிய பிரம விளையாட்டாயின் - பிரமத்துக்கு
ஞானமுண்டாகத் தக்கதாகப் பொருந்தப்பட்ட மாயாசரீரம் இந்தப் பிரமத்தைப்
பொருந்திக்கொண்டது மிக்க பிரமத்தினுண்டாய விளையாட்டாக இருப்ப
தொன்றாயின்; அவித்தை யென்ப தொன்று அன்னியந் தன்னில் உதிக்கு
மென்ற முன் உரையும் மறந்தனை - விளையாடுகிறவர்களுக்கு விளையாடப்
பட்ட பொருள் வேறானாற்போல பிரமத்தினுடைய விளையாட்டாகிய மாயா
சரீரமும் பிரமத்துக்கு வேறாயிருப்பதொன்று, ஆகையாற் பிரமத்தினிடத்திலே
உபாதிகள் தோன்றிப் பிரமத்தை மறைக்குமென்று நீ முன்னே சொன்ன
சொல்லையும் மறந்தனையாக வேண்டும்; நுண்நூற் குடம்பை நுந்துழிபோல்
உட்படு நெறியதனால் விடுநெறி இலதால் தலைமையும் அறிவும் இலதென் -
உலண்டுப் புழுவானது தன்னிடத்திலே நின்றுந் தோன்றின நுண்ணிய
நூலாலே தனக்குக் கூடாகப் பண்ணித் தான் அதற்குள்ளே புகுந்து பின்னைப்
புறப்படமாட்டாமல் அதற்குள்ளே செத்த தன்மைபோலப் பிரமமும் மாயா
சரீரத்துக்குள்ளே விளையாட்டாக வந்து புகுந்து பின்னைத் தானாகப்
புறப்படமாட்டாமல் நிற்கையால் அந்தப் பிரமத்துக்குச் சர்வ முதன்மையுஞ்
சர்வக்கியத்துவமு மில்லையென்று சொல் ; அவித்தையை விடுத்து எடுத்து
ஆணரும் வேற்றோ ரன்றே - இது பாசபந்தியா யிருக்கையாலே இந்த மாயா
சரீரத்தைத் தானாக விடுவித்துக்கொள்ள மாட்டாமல் நின்மலமா யிருக்கிற
தொரு குருமுதல் இந்த மாயாசரீரத்தை நீக்கிப் பாவக்குழியிலே நின்று
மெடுத்துத் தனக்கடிமையாக ஆண்டு கொள்கையினால் இந்தச் சரீரத்தோடுங்
கூடிநிற்கிறது பிரமமாகாது. அப்படியன்று காணும்; ஒளிகொள் தாமிரம்
குளிகை பெற்றாங்கு