பக்கம் எண் :

4. மாயாவாதி நிராகரணம்1191


  அவித்தையை வித்தை தவிர்க்குமென் றுரைக்கில்
நித்தன் அறிவன் சுத்தன்என் றுரைத்த
வித்தகம் என்நீ வித்தையும் 1வேறென்
எம்ம னோரில் ஒருவன் நின்இறை
115 அம்ம சைவந் தவன்நீ யன்றே
பன்மணி பசுநற் பாத்திர மெனவும்
நன்னூல் பால்நீர் நற்கதிர் எனவும்
உடலையும் உணர்வையும் உவமித் தனையேல்

அதன் வித்தையை வித்தை தவிர்க்குமென்று உரைக்கில் - பிரகாசத்தோடுங்
கூடியிருக்கிற செம்பானது இரத குளிகையோடுங் கூடின விடத்துக் காளிதம்
நீங்கிப் பொன்னான தன்மைபோல அந்தப் பிரமத்துக்கு உண்டாகிய சரீர
சம்பந்தத்தையும் அதனிடத்திலே தோன்றின விவேகக்கியானம் நீக்க அந்தப்
பிரமம் சுத்தமாமென்று நீ சொல்லில்; நித்தன் அறிவன் சுத்தனென்று
உரைத்த வித்தகம் என் இப்படி அசுத்தமாயிருக்கிற முதலை நீ முன்னே
நித்தியனென்றுஞ் சர்வக்கினனென்றும் நின்மலனென்றுஞ் சொன்ன
சாமர்த்தியம் என்தான்; நீ வித்தையும் வேறு என் - நீ விவேகமென்று
சொல்லுகிறது இந்த அவித்தையோடுங் கூடிக்கொண்டு நிற்கிற அதை வேறே
முதலென்று சொல்லு. இதுதான் காணும் அதுவென்று நீ சொல்லில்;
எம்மனோரில் ஒருவன் நின் இறை - நீ கர்த்தாவென்று சொல்லுகிற முதல்
பாசபந்திகளா யுள்ள எங்களிலே ஒருத்தனாக வேண்டும்; அம்ம - நான்
சொல்லுகிற சொல்லைப் புத்திபண்ணிக் கேட்பாயாக; சைவந்தவன் நீ யன்றே
- யாதொருத்தனைப் பொல்லாதவனென்று சொல்லப்பட்டது அப்படிச்
சொல்லப்பட்டவன் நீயாகவேண்டும். இது பிரமிதியை மறுத்தது.

     இதன்றியும் - பன்மணி பசுநற் பாத்திரமெனவும் நல்நூல் பால்
நீர் நற்கதிர் எனவும் உடலையும் உணர்வையும் உவமித்தனையேல் -
இரத்தினங்கள் பலவாயிருந்ததாமாயினும் அதிற் கோக்கப்பட்ட சரடு ஒரு
தன்மையா யிருந்தாற்போலவும், பசுக்கள் பலவாயிருந்ததாமாயினும் அவை
யிற்றி னுண்டாகிய பால் ஒரு தன்மையா யிருந்தாற் போலவும், பாண்டங்கள்
பல தன்மையா யிருந்ததாமாயினும் அவையிற்றிலே பிரதிபிம்பஞ்
செய்துகொண்டு நிற்கிற ஆதித்தன் ஒரு


     1. வேறொன்று - பாடபேதம்.