| 120 | தடமணி சரடொடு தாம்கூ டலவே உணர்வுணர் வொழியின் உலகுணர் வுறின்நின் | 125 | பாலும் பசுவுஞ் சாலுஞ் சாலக் கலம்பல வன்றிச் சலம்பல இலதெனக் காணுந ரின்றி வீண்நீ விளம்பினை ஆடியுள் நிழல்போற் கூடுதல் கூறின் தன்நிழல் கொண்டு தற்பணஞ் சலிக்கின் மன்நிழல் கொண்டுடல் வந்தகன் றிடுமே | தன்மையா யிருந்தாற்போலவும், கூவல் ஆழி குளம் சிறுகுழி கால்கள் பலவா யிருந்ததாமாயினும் அவையிற்றி லுண்டாகிய தண்ணீர் ஒரு தன்மையா யிருந்தாற்போலவும் என்று யோனிபேதங்களாயுள்ள உடல்களுக்கும் அவை யிற்றிலே கூடிநிற்கிற பிரமத்துக்கும் உவமையாகச் சொன்னாய். அப்படியாகில்; தடமணி சரடொடு தாம் கூடலவே - பிரகாசத்தினாலே மிகுத்திருக்கிற மணிகளும் சரடும் தாமாகக் கூடினதில்லை, அவையிற்றை வேறே ஒருத்தன் கோக்கக் கோப்புண்டு நின்ற தன்மைபோல உன்னுடை பிரமத்தையும் இந்த உடல்களையுங் கூட்டினவன் வேறே ஒருத்தன் உண்டாகவேணும். அதன்றியும;் உணர்வு உணர்வொழியின் உலகு உணர்வுறின் நின் பாலும் பசுவுஞ் சாலும் - உன்னுடைய பிரமமானது அறியாததாயும் அது கூடிநிற்கிற தேகாதிப் பிரபஞ்சம் அறிவேயாயும் இருந்ததாமாயின் நீ பாலையும் பசுவையும் உவமையாகச் சொன்னது ஒக்கும். அதன்றியும் - சாலக் கலம் பல அன்றிச் சலம் பல இலதெனக் காணுநரின்றி வீண் நீ விளம்பினை - மிகவும் பாத்திரங்களிற் பின்னமொழிந்து ஆதித்தனிற் பின்னமில்லை யென்றும், கூவல் ஆழி குளம் சிறுகுழி கால்களிற் பின்னமொழிந்து சலத்திற் பின்ன மில்லை யென்றுங் கண்டு சொல்வார்கள் சிலரையின்றி விருதாவிலே மிகவுஞ் சில வார்த்தைகளை நீ சொன்னது திட்டாந்த விரோதமாகையால் இது அர்த்தமாகாது; ஆடியுள் நிழற்போல் கூடுதல் கூறின் - கண்ணாடிக்குள் நிழலானது தோய்வற நின்றாற்போலச் சரீரத்துக்குள்ளே பரப்பிரமந் தோய்வற நிற்குமென்று நீ உன் மதத்திலே சொன்னதை நான் சொல்லுமிடத்து; தன் நிழல்கொண்டு தற்பணஞ் சலிக்கின் மன்னிழல் கொண்டு உடல் வந்து அகன்றிடுமே - தன்னிடத்திலே நிற்கிற |