| | மன் அயக் காந்த மெனவுடல் பிரம சன்னதி யளவிற் சலித்திடு மாயின் 1அகண்டிதஞ் சன்னதி யலதில தெவையும் | | 130 | நடந்திட வேண்டுங் கிடந்திடப் பெறாவே காந்தத் திரும்பு காட்டுநர்ப் பெறில்அயம் சேர்ந்திடும் நீக்குஞ் செயல்அதற் கிலதே | பிரதிபிம்பம் பிரதானமாகக் கொண்டு கண்ணாடியானது சலித்ததாமாயில் பரப்பிரமத்தினுடைய பிரதிபிம்பம் பிரதானமாகக் கொண்டு இந்த உடல் கூடியும் பிரிந்தும் நிற்கும். இவையிற்றுக் கில்லாதபடியாலே இது அர்த்தமன்று; மன் அயக் காந்தமென உடல் பிரம சன்னதி யளவிற் சலித்திடுமாயின் - நிலைபெற்று வாராநிற்கிற இரும்பானது காந்தம் விகாரமறநிற்க அதனுடைய சன்னதிமாத்திரத்திலே விகாரப்பட்ட தன்மைபோலப் பரப்பிரமமும் விகாரமற நிற்க அதனுடைய சன்னதி மாத்திரத்திலே உடலானது போக்குவரத்தைச் செய்யா நிற்குமாயின்; அகண்டிதம் சன்னதியலது இலது எவையும் நடந்திட வேண்டும் கிடந்திடப் பெறாவே - பரப்பிரமமென்று சொல்லுகிறது கண்டித மல்லாமல் அகண்டிதமானபடியாலே அதனுடைய சன்னதியல்லாதவிடம் ஓரிடமுமில்லை. ஆகையால் கடபடாதிகளா யுள்ளவை யெல்லாஞ் சன்னதி மாத்திரத்திலே போக்குவரத்தைச் செய்யவேண்டும். அதன்றி உடலானது சேட்டித்துங் கடபடாதிகள் சேட்டையின்றிக் கிடக்கிறதுஞ் சன்னதியிலே யெல்லாங் காரியப்படுமென்று சொல்லுகிறதுக்குப் பெறாது; காந்தத்து இரும்பு காட்டுநர்ப் பெறில் அயம் சேர்ந்திடும். காந்தமும் இரும்புங் கூடிக்கிடந்ததா மாயினும் அவை தானாகக் காரியப்படமாட்டா. அவையிற்றை முகமொக்கக் காட்டுவார் சிலரைப் பெற்றகாலத்து இரும்பானது காந்தத்தைச் சென்று பொருந்தாநிற்கும். ஆகையால் உன்னுடைய பிரமத்தையும் உடலையுங் கூட்டிக் காரியப்படுத்துகிறதொரு முதல் வேறே உண்டென்று கொள்ளுவாயாக. இதன்றியும்; நீக்குஞ் செயல் அதற்கு இலதே - காந்தமானது இரும்பைக் கூட்டிக்கொள்ளுகிற தொழிந்து அதை நீக்கிக் கொள்ளுந்தன்மை அதற்கு உண்டாகாது. பிரமத்தின் சன்னதியிலே உடல் பிறந்தும் வருகையால் நீ காந்தமிரும்
1. அகண்டிதன் - பாடபேதம். |