| 135 | கனாத்துயர் கயிற்றர வெனாச்சில தொடுத்தனை கனவின் பயனும் நனவின் பயனும் வினையின் பயன் அவை பொய்யென வேண்டா | | 140 | உடல்மா றாட்டக் கடனது கருதுக உற்ற புற்றும் மற்றதிற் கயிறும் உடலுங் கூடமுச் சடமென அறிதி அறிவு கயிறென் றறியா தன்றே அச்சம தடைதல் கொச்சமை யுடைத்தே | பென்றது திட்டாந்தவிரோதமாகையால் அது அர்த்தமன்று. இதன்றியும்; கனாத்துயர் கயிற்றரவு எனாச் சில தொடுத்தனை - சொற்பனத்திலே அதிபயங்கரமாயுள்ள காரியங்களைக் காண்கிறவன் விழித்த விடத்தில் அது பொய்யான தன்மைபோலவும், இராக்காலத்திலே புற்றின் வாசலிலே கயிறு கிடக்கிறதைக் கண்டு பாம்பென்று புத்திபண்ணிப் பயப்பட்டவனுக்கு விடிந்த அவதரத்துப் பாம்பு பொய்யான தன்மைபோலவும் சுகதுக்கங்களாலுண்டாகிய அனுபோகங்களும் அந்தப் பிரமத்துக்கு உண்டாகாதென்று சொன்னாய்; கனவின் பயனும் நனவின் பயனும் வினையின் பயனவை பொய்யென வேண்டா சொற்பனத்திலே சூக்குமதேகத்தோடுங் கூடி இவன் சத்தாதி விஷயங்களைப் பொசித்ததும்,சாக்கிரத்திலே தூலதேகத்தோடுங்கூடிச் சத்தாதி விஷயங்களைப் பொசித்ததும் இரண்டும் இவன் முன்னே செய்த பிராரத்தம் பொசித்ததொழிந்து சாக்கிரத்திற் பொசித்தது மெய்யென்றும் சொற்பனத்திற் பொசித்தது பொய்யென்றும் நீ சொல்ல வேண்டுவதில்லை; உடல்மாறாட்டக் கடனது கருதுக - சாக்கிரத்துக்குத் தூல தேகத்தோடுங்கூடி யனுபவிக்கும், சொற்பனத்துக்குச் சூக்கும் தேகத்தோடுங்கூடி யனுபவிக்கும். ஆகையால் சரீரவேற்றுமை உள்ள தென்றறிவாயாக; உற்ற புற்று மற்றதிற் கயிறும் உடலுங் கூட முச்சடமென அறிதி - இவன் சென்று இராக்காலம் பொருந்தப்பட்ட புற்றும் அதன் வாசலிலே கிடக்கிற கயிறும் இவனுடைய சரீரமுமாக மூன்றுஞ் சடமென்கிறது நீயும் அறிவாய்; அறிவு கயிறென்று அறியாதன்றே - அறிவாயுள்ள பிரமம் கயிற்றைக் கயிறென்றறியமாட்டாமற் பிரமிக்குமாகில் அதை அறிவென்று சொல்லப்படாது; அச்சமது அடைதல் கொச்சமை யுடைத்தே - பிரமம் கயிற்றைப் பாம்பென்று |