| | இன்னும்அக் கனவில் இருளுறு கயிற்றிற் பின்னும்நின் பிரமம் பிரமித் திடுமே துன்னிய வினையிற் செம்மலர்ப் பளிங்கெனத் தானாந் தகைமை யானால் மலரென | | 145 | ஒருபய னன்றிப் பலபயன் மரீஇயது இருவினை தருபயன் எனநனி வேண்டில் ஆண்ட வித்தையும் அவித்தைகொ டாக்கையும் ஈண்டிரு வினையும் இயம்பினை பரத்தைக் | பயப்படுமாகில் அதைக் கர்த்தாவென்று சொல்லப்படாது. இதன்றியும்; இன்னம் அக்கனவில் இருளுறு கயிற்றிற் பின்னும் நின் பிரமம் பிரமித்திடுமே - இன்னமும் ஒரு குற்றமுண்டு. கனவில் தீங்கு பொய்யென்றறிந்தும் கங்குலிற் கயிறு பாம்பல்லவென் றறிந்து மிருக்கச் செய்தே மீளவுங் கனவைக் கண்டவிடத்தும் கங்குலிலே கயிற்றைக் கண்டவிடத்தும் உன்னுடையபிரம மானது அச்சப்படுகிறதுதகுமோ? ஆகையால் இந்த உடம்போடுங்கூடி இப்படி மயங்கி நிற்கிறது பிரமமன்று. இதன்றியும்; துன்னிய வினையிற் செம்மலர்ப் பளிங்கெனத்தானாந் தகைமையானால் - சிவந்த பூவோடுங் கூடியிருக்கிற படிகம் தனது தன்மையிழந்து அந்த வன்னமா யிருந்ததாமாயினும் அதில் ஒருசற்றுந் தோய்வற நின்றாற்போலப் பிரமமும் நெருங்கி வருகிறகன் மங்களைப் பொசிக்குமிடத்து அந்த விஷயங்கள் தானாயிருந்ததாமாயினும் அதில் ஒரு சற்றுந் தோய்வற நிற்குமாமாயின்; மலரென ஒரு பயனன்றிப் பல பயன் மரீஇயது இருவினை தரு பயனென நனிவேண்டில் - படிகம் பூவோடு கூடியிருந்தபொழுது சிவந்த வன்னமொன்றுமேயா யிருந்தாற்போல வினையோடுங் கூடின பிரமமும் ஏகப்பிரகாரமா யிராமல் நானாவிதமாகக் கொண்டு இருப்பானேனென்ன, அது புண்ணிய பாவங்கள் பலவாயிருக் கையினாலே அதையனுபவிக்க வேண்டிப் பிரமமும் வெகுவிதமாயிருந்த தென்று மிகவுமுனக்குப் பக்ஷமாயின்; ஆண்டவித்தையும் அவித்தை கொடாக்கையும் ஈண்டு இருவினையும் இயம்பினை - இவ்விடத்து இவனை அடிமையாக ஆண்டுஇரக்ஷித்துக்கொள்ளுகிறதொரு விவேகஞானமும் அறியாமையோடுங் கூடியிருக்கிறதொரு சரீரமும் உண்டென்றாய், பலவிதமாயிருக்கிற புண்ணிய பாவங்களும் உண்டென்றாய். ஆகையால்; பரத் |