பக்கம் எண் :

1196சித்தாந்த சாத்திரம் - சங்கற்பநிராகரணம்


150
கள்வரைப் பிணிக்குங் காவல ரெனமுயல்
தொல்வினைத் துடக்கில் தோன்றுடற் சிறையிட்டு
இருவினை யூட்டும் 1அருளுறும் எம்மான்
அருவினை உடற்கண் அவத்தைகள் உரைத்தனை
ஆர்உறு பவர்பரம் அகண்டிதம் அடங்காது
ஓர்வில துடல்சடம் உறுநெறி யாதென
155 மன்னிய கரண மாறாட் டத்திற்
பன்னினம் என்னின் இவையோ பரமோ
முதலிய தாயின் இவைபிறழ் வெய்தாது

தைக்கள்வரைப்பிணிக்குங் காவலரென முயல்தொல்வினைத்துடக்கில் தோன்று
உடற் சிறையிட்டு இருவினை யூட்டும் அருளுறும் எம்மான் இவ்விடத்துக்
களவு கண்ட கள்ளரைக் கொண்டுவந்து சிறைசெய்து அதற்குத் தக்க
தண்டங்களைச் செய்கிற இராசாக்களைப்போல முற் செனனங்களிலே செய்த
பழைய வினையினது தொந்தனையாலேயுண்டாக்கப்பட்ட உடலாகியசிறைச்
சாலையிலே உன்னுடைய பிரமத்தையிட்டுப் புண்ணிய பாவங்களென்கிற
தண்டங்களைப் பொசிப்பிக்குஞ் சர்வான்மாக்க ளளவினும் மிகவுங் கிருபை
செனித்திருக்கிற எம்முடைய சுவாமியாயுள்ள கர்த்தா. இதன்றியும்; அருவினை
யுடற்கண் அவத்தைகள் உரைத்தனை - அரிதாயுள்ள வினைக்கீடாக
எடுக்கப்பட்ட உடலத்திலே மூன்று அவத்தைப்படுமென்று நீ உன்மதத்திலே
சொன்னாய்; ஆர் உறுபவர் பரம் அகண்டிதம் அடங்காது இந்தச் சரீரத்தோடு
உண்டாகிய மூன்றவத்தையும் அனுபவிக்கிறவர் யார்தான்? பரப்பிரமமோ
வென்னில், அது பரிபூரணமாயிருந்தபடியாலே நனவு கனவு சுழுத்தியென்கிற
அவத்தைகளில் அடங்காது; ஓர்விலது உடல் சடம் உறுநெறி யாது என -
உடல் சடமாயிருந்தபடியாலே அவத்தைப்படுமென்கிற முறைமை அதற்கு
உண்டாகாது. பின்னை இந்த அவத்தைப்படுகிற வழி ஏதென்று நான் கேட்க;
மன்னிய கரண மாறாட்டத்திற் பிரிந்தவிடத்து உண்டாகிய மயக்கமாயிருக்கும்
யாம் அவத்தை யென்று சொல்லப்பட்டதென்னில்; இவையோ பரமோ
முதலியது அந்தக்கரணங்களோ பரப்பிரமமோ இந்தச் சரீரத்துக்கு
முதன்மையை யுடையது? பரப்பிரமமே முதன்மையை யுடையதென்னில்;


     1. எம்மான் அம்மான் - பாடபேதம்.