பக்கம் எண் :

4. மாயாவாதி நிராகரணம்1197


160 இவையெனில் உனது மொழிபழு துளதே
உடற்படு பிரமம் உறுமேற் சாளரத்து
இடத்தகும் உறுவிரல் நுதியளி எறிதுயர்
165
 
அங்குலி தானே அருந்திடில் உடற்கண்
தங்கிய அறிவு தனித்துறு மன்றே
தற்பண நிழற்கட் குற்றிபாய்ந் தற்றால்
நற்கணிற் றுயரம் நணுகாத் தகைத்தெனில்
நின்மொழி விரோதமுங் காட்சி விரோதத்
தன்மையும் உறும்அவை தவறில ஆகா

ஆயின் இவை பிறழ்வு எய்தாது - பரப்பிரமம் முதன்மையை யுடையதாயின்
அந்தப் பரப்பிரமம் நிற்க இந்த அந்தக்கரணங்கள் நீங்கமாட்டாது; இவை
யெனில் உனதுமொழி பழுதுளதே - இந்த அந்தக்கரணங்கள் முதன்மையை
யுடையதெனில் எல்லா முதன்மையு முடையது பரப்பிரமமென்று வேதஞ்
சொன்னது பழுதாகவேண்டும்; உடற்படு பிரமம் உறுமேல் - அப்படியன்று
காணும் அவத்தை யுறுகிறது உடற்குள்ளே அகப்பட்டு நிற்கிற பிரமமேயாகில்;
சாளரத்து இடத்தகும் உறுவிரல்நுதி அளி எறி துயர் அங்குலி தானே
யருந்திடில் உடற்கண் தங்கிய அறிவு தனித்துறு மன்றே - பலகணி
வாசலிடத்திலே புறம்பே நின்று உள்ளே ஒரு விரலை நீட்ட அந்த விரலின்
நுனியிலே ஒரு குளவியானது கொட்ட அதனாலுண்டாகிய விதனம் அந்த
விரல் தானே அனுபவித்ததாமாயின் இந்த உடலினிடத்திலே பொருந்தி
நிற்கிற பிரமமும் அவத்தையைத் தனியே அனுபவித்த தென்று சொல்லலாம்;
அந்த விரலின் நுனியிலே குளவி கொட்டின கடுப்புப் பாதாதிகேச மளவாக
நின்று கடுக்கிறபடியாலே உடலினிடத்திலே தங்கி நிற்கிற அறிவுதனிலே
அவத்தையை யுறுமென்று. நீ சொன்னது அர்த்தமாகாது. இதன்றியும்; தற்பண
நிழற்கட்குற்றி பாய்ந்தற்றால் நற்கணில் துயரம் நணுகாத் தகைத்தெனில்
கண்ணாடியிடத்திலே தோன்றின நிழலினது கண்ணிலே கூச்சுக்கொண்டு
சாடினவிடத்துக் கண்ணாடி யுடைந்த தொழிந்து கண்ணுக்கு லயம் வாராத்
தன்மைபோலச் சுகதுக்கங்களா லுண்டாகிய அனுபோகங்களும் உடலுக்
கொழிந்து பிரமத்துக் கில்லையென்னில்; நின்மொழி விரோதமுங் காட்சி
விரோதத் தன்மையும் உறும் அவை தவறில ஆகா - உன்னுடைய சாத்திரஞ்
சுகதுக்கங்களை