பக்கம் எண் :

1198சித்தாந்த சாத்திரம் - சங்கற்பநிராகரணம்

170 யாம்உடைப் பதிவகை யாவரும் பலகலை
சொல்லுதல் எளிதரி தத்தொழில் புரிவெனப்
புல்லிய பழமொழி புதுக்கினை யன்றே
அகண்டித மெனநீ பகர்ந்தமை தனக்குப்
175 பந்தம் இதுவெனத் தந்தமை கருதில்
வானில் நடக்குங் காலினைப் பிடித்துப்
பருவிலங் கிட்ட ஒருவன் நீயன்றே
பந்தம தகல 1முந்து விவேகம்
வான்வளி யெனத்தனில் தானே தோன்றின்

யனுபவிக்கிறது அறிவென்று சொல்லச்செய்தே நீ இப்பொழுது உடலுக்
கொழிந்து அறிவுக்கு அனுபோகமில்லை யென்கையாலே சாத்திர விரோதமும்,
பிரத்தியக்ஷமாக அறிவு சுகதுக்கங்களை அனுபவிக்கச்செய்தே அனுபோக
மில்லை யென்கையால் பிரத்தியக்ஷ விரோதமும் இவை யிரண்டுந் தப்பாமல்
உண்டாகாநிற்கும்; யாம் உடைப் பதிவகை யாவரும் பலகலை சொல்லுதல்
எளிது அரிது அத்தொழில் புரிவெனப் புல்லிய பழமொழி புதுக்கினையன்றே
- நாம் வத்து நிர்ணயமாக நாட்டப்பட்டது 'சொல்லுதல் யார்க்கு மெளிய
அரியவாஞ், சொல்லிய வண்ணஞ் செயல்' என்று பொருந்தப்பட்ட
திருவள்ளுவப்பயனிற் குறளை நீ இப்பொழுது புதுக்கினாயாகவேண்டும்.
நாமென்றது அலக்ஷியச் சொல். இதன்றியும்; அகண்டிதமெனநீ பகர்ந்தமை
தனக்குப் பந்தம் இதுவெனத் தந்தமை கருதில் பரப்பிரமம் என்றாலுங்
கண்டிக்கப்படாது அகண்டிதமாயிருப்பதொன் றென்று நீ முன்னே
சொன்னதற்கு இப்பொழுது மாயாவுபாதிகளினாலே பந்திக்கப்பட்டு நிற்கு
மென்று நீ சொன்னதை விசாரித்துப் பார்க்கில்; வானில் நடக்குங் காலினைப்
பிடித்துப் பருவிலங்கிட்ட ஒருவன் நீ யன்றே - ஆகாயத்தின்கண்ணே
வியாபரிக்கிற காற்றினைப் பிடித்து அங்கிங் கசையாத வண்ணம் பெருத்த
தொருவிலங்கையிட்டு வைத்தவன் யாவனொருவன் நீ யென்று சொல்லப்படும்.
இது பிரமாதாவை மறுத்தது. இது அவனுடைய பெத்தமாம்.

     மேல் அவனுடைய முத்தியை மறுக்கிறான்; பந்தமது அகல முந்து
விவேகம் வான்வளியெனத் தனில் தானே தோன்றின் - பிரமம்மாயாவு
பாதிகளினாலே பந்திக்கப்பட்டிருக்குமென்று சொன்ன அந்தப்


     1, உந்து - பாடபேதம்.