பக்கம் எண் :

4. மாயாவாதி நிராகரணம்1199


  முன்புள தாயின் மயங்கா திலதெனிற்
பின்புள தாகா திலதுள தெனில்வெளி
மலரது தரும் அனல் மரக்கண் இன்றாகித்
தருவது தகுமெனில் தானே தோன்றா
180 விறகின் உதித்த கனல்தகு மாயின்
அவித்தையின் உதித்த வித்தை அம்மரத்து

பந்தம் பிரமத்துக்கு இப்பொழுது நீங்கத்தக்கதாக வந்து தோன்றின விவேகக்
கியானம் ஆகாயத்தினிடத்திலே ஒரு வாயுத் தோன்றி அந்த ஆகாயத்தை
மறைத்துநின்ற மேகங்களை யொதுக்கி அதனை நின்மல மாக்கின வாயுவைப்
போல இந்த விவேகக்கியானமும் பிரமத்தினிடத்திலேநின்றுந் தானே
தோன்றினதாயின்; முன்புளதாயின் மயங்காது - இந்த விவேகம் பிரமத்துக்கு
முதலே யுள்ளதாயின் அது நிற்கச்செய்தே பிரமத்துக்கு நடுவே மயக்கம்
வாராது; இலதெனில்இந்த விவேகம் பிரமத்துக்கு முதலேயுள்ளதல்ல நடுவே
ஓர் அவதரத்திலே வந்து உண்டானதென்று நீ சொல்லில்; பின்புளதாகாது
முன்பு இல்லாதது பின்பு ஓர் அவதரத்திலே யுண்டாகாது; இலது உளதெனில்-
முன்பு இல்லாதது பின்பு உண்டாமென்னில்; வெளிமலரது தரும் - இல்லாதது
உண்டாமென்கிறது ஆகாயத்திலே ஒரு பூஉண்டாயிற்றென்று சொல்லுதலை
யொக்கும். அப்படி யன்று காணும்; அனல் மரக்கண் இன்றாகித் தருவது
தகுமெனில்-அக்கினியினது பிரகாசம் மரத்தினிடத்திலே முன்பு காணப்படாம
லிருந்து பின்பு ஓர் அவதரத்திலே காணப்பட்டாற்போல முன்பு இல்லாத
விவேகமும் பின்பு உண்டாங்காணுமென்று நீ சொல்லில்; தானே தோன்றா
- விறகினிடத்து முன்பு இல்லாத அக்கினி பின்பு உண்டாமிடத்து ஒரு
அரணியை வைத்துக் கடைய உண்டானதொழிந்து தானாக உண்டாகாது.
ஆகையால் உன் பிரமத்துக்கும் பின்பு உண்டாகிய விவேகக்கியானமும்
வேறே ஒருத்தன் உண்டாக்க உண்டான தென்று கொள். இதன்றியும்; விறகின்
உதித்த கனல் தகுமாயின் அவித்தையின் உதித்த வித்தை - அன்னுவயம்;
அவித்தையின் உதித்த வித்தை விறகின் உதித்த கனல் தகுமாயின் என
மாறுக. இதன் பொருள்: அறியாமையாகிய பெத்தநிலையிலே தோன்றின
விவேகம் விறகினிடத்திலே தோன்றின அக்கினியை யொக்கு