| | உதித்த விவேகம் வித்தையென் றுரைத்த வெந்தழ லனைய விவேக மதுதித்த இந்தன மனைய இறையிலன் றற்றே | | 185 | இற்படப் பிரிப்பின் மெய்ப்படும் எவற்றையும் இதுவன் றிதுவன் றெனக்கழி காலை அதுவே தானே யாயின தென்றனை வித்தை முன்னர் அவித்தையும் அவித்தைமுன் வித்தையும் நில்லா வியன்ஒளி இருளென | மாயின்; அம்மரத்து உதித்த விவேகம் வித்தையென்று உரைத்த வெந்தழல் அனைய - அன்னுவயம்; வித்தையென்று உரைத்த விவேகம் அம் மரத்துதித்த வெந்தழலனைய என மாறுக. இதன் பொருள் வித்தையென்று சொல்லப்பட்ட விவேகக்கியானம் அந்த விறகிலே தோன்றின வெவ்விய தழலை யொக்கும்; விவேகமது உதித்த இந்தனம் அனைய - விவேகக்கியானந் தோன்றின தானம் அந்த விறகினை யொக்கும். ஆகையால்; இறையிலன் றற்றே - விவேகக்கியானந் தோன்றினது பிரமத்திலே யென்று சொல்லப்பட்டது, மாயா அவித்தையிலே யாகவேண்டும். இது திட்டாந்த விரோதமாகையால் நீ சொன்னது அர்த்தமாகாது. இதன்றியும்; இற்படப் பிரிப்பின் மெய்ப்படும் எவற்றையும் இதுவன்று இதுவன்று எனக் கழி காலை அதுவேதானே ஆயினது என்றனை - வீடானதை ஓரொரு வைக்கோலாகவும் ஓரொருகழி யாகவும், ஓரொரு மரமாகவும் நாளிலே பிடுங்கிப் போடப்பின்பு வீடென்கிற சொரூபமில்லையாய்ப் போன தன்மைபோலவும், புடவையானதை நாளிலே ஓரொரு இழையாகப் பிடுங்கிப் போட்ட பின்பு புடவையென்கிற சொரூப மில்லையாய்ப் போன தன்மை போலவுஞ் சரீரமாகக் கூடிக்கொண்டிருக்கிற எல்லா உபாதிகளையும் இது நாமல்ல இது நாமல்லவென்று நேதிபண்ணி நீங்கினவிடத்து அந்தப் பரந்தானே இந்தச் சிவனாயிருந்ததென்று நீ சொன்னாய்; வித்தை முன்னர் அவித்தையும் அவித்தைமுன் வித்தையும் நில்லா அறிவாகிய பிரமத்தின் முன்னே அறியாமையாகிய தேகாதிப்பிரபஞ்சம் தோன்றி நில்லாது. அறியாமையாகிய தேகாதிப் பிரபஞ்சத்தின் முன்னே அறிவாகிய பிரமமுந் தோன்றி நில்லாது. அதென்போல வென்னில்; வியன் ஒளி இருளென-மிக்க பிரகாசத்தையுடைய ஆதித்தன் |