பக்கம் எண் :

4. மாயாவாதி நிராகரணம்1201


190 இருளல ஒளிக்கும் ஒளியல இருட்கும்
ஒருகா லத்தும் ஒருபயன் இலதால்
இரண்டையும் நுகரும் முரண்தரு விழியென
வித்தையும் அவித்தையும் உய்த்ததொன் றுளதே
தானே தானா மானாற் பயனென்
195 தன்னில் தன்னைத் தானே காணிற்
கண்ணிற் கண்ணைக் காணவும் படுமே
தன்நல மதனைத் தானே நுகரும்
என்னின் முன்நலம் எய்தா திருந்ததென்

முன்னே அந்தகாரம் நில்லாதாற் போலவும் அந்தகாரத்தின் முன்னே
ஆதித்தன் நில்லாதாற்போலவுமெனக் கொள்க; இருளல ஒளிக்கும் ஒளியல
இருட்கும் ஒரு காலத்தும் ஒரு பயன் இலது - இருளல்லாத சுத்த ஒளிக்கும்
ஒளியல்லாத சுத்த இருளுக்கும் ஒரு காலத்திலும் இவையிற்றுக்கு ஒருபயனும்
உண்டாகாது; ஆல் - அப்படி யிருக்கையால்; இரண்டையும் நுகரும் முரண்
தரு விழியென இருளோடுங்கூடி இருளை யனுபவித்தும் வெளியோடேகூடி
வெளியை யனுபவித்தும் அவை யிரண்டு முதலு மாகாமல் தனியே ஒரு
முதலாய் நின்ற பெரிய கண்ணினது தன்மையைப் போலவும்; வித்தையும்
அவித்தையும் உய்த்ததொன்று உளதே - அறிவாயுள்ள பதியோடுங்கூடி இது
பதியென்றறிந்தும் அறியாமையாயுள்ள பாசத்தோடுங்கூடி இது பாசமென்ற
றிந்தும் அவையிரண்டுமல்லாமற் பசுவென்று தனியே ஒருமுதலுண்டென்று
அறிவாயாக; தானே தானாமானாற் பயன் என் - இந்தப் பிரமந்தானே
பிரமமானதால் இந்தப் பிரமத்துக்கு உண்டாகிய பிரயோசனம் என்னதான்;
தன்னில் தன்னைத் தானே காணில் - இந்தப் பிரமமானது தன்னிடத்திலே
தன்னுடைய இயல்பைத் தானே காணப்படுமாயின்; கண்ணிற்கண்ணைக்
காணவும் படுமே - கண்ணானது தன்னிடத்திலே தன்னுடைய சொரூபத்தைத்
தானே காணுமென்று சொல்லவும் படுமே ? அது உண்டாகாது. ஆகையால்
நீ பிரமம் தன்னிலே தன்னைக் காணுமென்று சொன்னது அர்த்தமன்று.
இதன்றியும்; தன் நலமதனைத் தானே நுகரும் என்னின் - பிரமம் தன்னிடத்தி
லுண்டாகிய சுகத்தைத் தானே அநுபவியாநிற்குமென்று நீ சொல்லில்; முன்
நலம் எய்தா திருந்தது என் கட்டிபோலெனக் கதறினை - பிரமம்