பக்கம் எண் :

1202சித்தாந்த சாத்திரம் - சங்கற்பநிராகரணம்

200 கட்டி போலெனக் கதறினை இன்பம்வந்து
1ஒட்டிடும் வத்தை யுடையையா யிடினே
205
 
தத்துவ மசியென வைத்தமுப் பதத்திற்கு
ஒன்றே பொருளென் றன்றே பகர்வது
நீபுலி யாயினை யென்றாங் குணரில்
ஆயினை என்றதும் ஆகு வமைத்தால்
நோயா யினமெனல் ஆயா யென்றால்
அகமே பிரம மாயின தென்றால்

இந்தப் பெத்தமுண்டாவதற்கு முன்னே தன்னிடத்தி லுண்டாகிய சுகத்தைத்
தான் அனுபவியாம லிருப்பானேனென்று நான் கேட்டதற்குக் கருப்புக்
கட்டியானது தன்னிடத்தி லுண்டாகிய இரதத்தைத் தான் அனுபவியாம
லிருந்தாற்போலுமென்று நீ கத்தினாய்; இன்பம்வந்து ஒட்டிடும் வத்தை
யுடையை ஆயிடினே - அந்தப் பிரமத்தி லுண்டாகிய சுகம் உனக்கு இந்த
முத்தியிலே யனுபோகமானது நீ தனியே பசுவென்று ஒரு முதலாய் அதிலே
பாச பந்தியாயிருந்து இப்பொழுது அந்தப் பாசம் நீங்கிப் பதியோடு கூட்டு
கையினாலேயெனக் கொள்க; தத்துவமசியென வைத்த முப்பதத்திற்கு - தத்
அது துவம் நீ அசி ஆகிநின்றா யென்கிற மகாவாக்கியத்துக்குப் பொருள்
விசாரிக்குமிடத்து; ஒன்றே பொருளென் றன்றே பகர்வது - ஒன்றேயா
யிருக்கும் இதற்கு அர்த்தமென்றல்ல அந்த மகாவாக்கியஞ் சொல்லுவது.
பின்னை எங்ஙனே யென்னில்; நீ புலியாயினை யென்று ஆங்கு உணரில் -
ஒருவன் ஒருவனுடைய வீரத்தைக் கண்டபொழுது நீ புலியாயினை யென்று
அவன் அங்ஙனஞ் சொன்ன சொல்லை விசாரித்துப் பார்க்கில்; ஆயினை
என்றதும் ஆகு உவமைத்தால் ஆயினையென்றதற் குவமைத்தேயென்று
லக்ஷணைவிதியிற் சூத்திரங்கள் சொல்லுகையினால் அவன் புலியா
கின்றானல்லன். இதன்றியும்; நோயாயின மெனல் ஆயாய் - ஒருவன்
ஒருவனைப் பார்த்து நீ இப்படிப் பொல்லாதா யிருப்பானேனென்ன நாம்
நோயாய்க் கிடந்தோம் கண்டீரேயென்று அவன் சொன்ன சொல்லுக்கு
அர்த்தத்தை நீ தானே ஆராய்ந்து பாராய். அவன் கொண்ட வெதுப்புக்
குளிர் அவனாகிறதில்லையே; என்றால் - அப்படியிருக்கையால்; அகமே
பிரமமாயின


     1. ஒட்டும் வித்தையை - பாடபேதம்.