| | சகமே அறியத் தான்வே றன்றே உண்மையிற் சலமிலம் உடற்சலம் சலமுறும் வெண்மதி போல விளங்கின மென்றனை | | 210 | அசல னாகிக் சஞ்சல சலத்துச் சலனம் மேவினம் எனமதி காண வேண்டும தன்றிக் காண்பவர் பிறரேல் ஈண்டுன தேகம்என் செய்த தியம்புக | தென்றால் - அகம் தானே பிரம மாகாநின்றதென்று மாகாவாக்கியஞ் சொல்லுகையால்; சகமே யறியத் தான்வே றன்றே - ஒருவர் இருவரன்றி இந்தப் பிரபஞ்ச மித்தனையும் அறியத்தக்கதாக இவன் அந்தப் பிரமத்துக்கு வேறென்கிறது தப்பாதென் றறிவாயாக. அன்றியும்; உண்மையிற் சலமிலம் உடற்சலம் - எம்முடைய உண்மையைப் பார்க்குமிடத்து அதிலே நமக்குச் சலனமில்லை. இந்த உடலிலுண்டாகிய சலனம் உடலுக்காயிருக்கும். அதென் போலவென்னில்; சலமுறும் வெண்மதிபோல - சலத்தோடே கூடியிருக்கிற மதி அந்தச் சலம் அசைந்தபொழுது தானும் அசைந்தாற்போலே யிருந்த தொழிந்து அதனுடைய உண்மையைப் பார்க்குமிடத்து அந்தமதிக்கு அசைதலில்லையானாற்போல; விளங்கினம் என்றனை - இங்ஙனம் இந்த முத்திதசையில் விளங்காநின்றோமென்று நீ சொன்னாய் அசலனாகிச் சஞ்சல சலத்துச் சலனம் மேவினம் என மதி காண வேண்டும் - நாம் சலனமில்லாம லிருப்பானொருத்தன், ஆற்றிலே ஓடுகிற சலத்தினுடைய சஞ்சலங்கொண்டு நாமுஞ் சலித்தாற் போலே யிருந்ததொழிந்து நமக்கு அந்தச் சலனமில்லை யென்று அந்தமதியானது காணவேண்டும். அப்பொழுது நீ சொன்ன திட்டாந்தமும் ஒக்கும்; அதன்றிக் காண்பவர் பிறரேல் - அதொழிந்து இந்த மதிக்கு அசைதலில்லை தண்ணீருக்கே அசைதலென்று அந்த மதியை யொழிந்து வேறே யொருத்தன் கண்டு சொன்னாற்போல அந்தப்பிரமத்துக்குச் சலனமில்லை உடலுக்கே சலனமென்று அந்த பிரமத்தை யொழிய வேறே யொருத்தன் கண்டு சொல்லுகையினாலே; ஈண்டு உனது ஏகம் என் செய்தது இயம்புக - இவ்விடத்துப் பிரம மொன்றுமே உள்ளதென்று நீ சொன்ன சொல் ஏதாய் முடிந்தது சொல்லாய். இது அவனுடைய சீவன் முத்தியை மறுத்தது. |