| 220 | கன்ம காண்டங் காரண மாக மன்னும் விவேகம் என்னில் அவித்தைக்கு ஏது காரணம் ஓதினை யில்லை இதற்குக் காரணம் விதித்தல்வேண் டின்றே அரணியி லுதித்த கனலவை கவர்வென | | 225 | விரதத் துதித்த விவேகம தழித்தல் வருந்தி யாயினுந் திருந்திய வேத நீதி யெல்லாம் நீத்துப் போதமொன்று அறியார் தாமும்இகழ் அவ்வழி நடத்தல் | மேல் அந்தத் தன்மை கூடாதவர்களுக்குச் சாதன சதுட்டயங்களினாலே பிரமக்கியானம் உண்டா மென்பதனை மறுக்கிறான்; கன்மகாண்டங் காரணமாக மன்னும் விவேகம் என்னில் - இந்தத் தன்மை கூடாதவர்கள் யாகாதிகளாயுள்ள கன்ம காண்டங்களை அனுட்டிக்க அது காரணமாக அவர்களுக்குப் பின்பு விவேகக்கியான முண்டா மென்று சொல்லில்; அவித்தைக்கு ஏது காரணம் ஓதினையில்லை பிரமத்தை மாயா அவித்தைகள் வந்து ஓரவதரத்திற் பொருந்தி அதை மயக்கிக்கொண்டு நிற்குமென்று நீ சொன்னதற்கு இது இன்ன காரணமாகப் பிரமத்தை வந்து பொருந்திற்றென்று ஒன்றைச் சொன்னாயில்லை; இதற்குக் காரணம் விதித்தல் வேண்டின்றே - கன்மம் காரணமாக விவேகம் உண்டா மென்றதுபோலப் பிரமத்துக்கு முன்னே இப்படி இருப்பதொரு குற்றமுண்டு, அது காரணமாக இந்த அவித்தைகள் வந்து இப்பொழுது பொருந்திற்றென்று ஒன்றை நாட்ட வேண்டும்; அரணியில் உதித்த கனல் அவை கவர்வென விரதத்து உதித்த விவேகம் அது அழித்தல் - தீக்கடை கோலை மரத்தில் வைத்துக் கடைய அந்தத் தொழிலினாலே யுண்டாகிய அக்கினி அந்த இரண்டு காட்டத்தையுஞ் சுட்டுப்போட்டதென்று சொல்லலாமாகக் கன்மங்களைச் செய்ய அதனாலே யுண்டாகிய விவேகம் அந்தக் கன்மங்களை யில்லையாக்கிப் போடுமென்கிறது; வருந்தியாயினுந் திருந்திய வேத நீதியெல்லாம் நீத்து - சதாசார சன்மார்க்கங்களை நன்றாகச் சொல்லப்பட்டிருக்கிற வேதவொழுக்கமெல்லாம் வருந்தியுங் கைவிட்டு; போதமென்று அறியார் தாமும் இகழ் அவ்வழி நடத்தல் பிரமக்கியான மென்கிறது ஏகதேசமுங்கூட அறியாதவர்களும் |