| 230 | பொறியோ போத நெறியோ இதுபவம் நீங்கிடும் நெறிதரு பாங்கினைப் பழித்தல் | 235 | நன்றி கொன்ற லன்றே அன்றியும் ஞால நீயேயும் நான்மறை நீதியும் பாலர்உன் மத்தர் பசாசரி லெனவும் உறங்கி னோன்கை வெறும்பாக் கெனவும் தானே தவிரா தானாற் புரியாது ஒழிந்திடின் நிரயத் தழுந்துதல் திடமே | பிரமக்கியான முண்டாயிற்று எங்களுக்கு ஆசாரம் வேண்டுவதில்லை யென்று அனாசாரங்களைச் செய்துகொண்டு திரிகிற இது; பொறியோ போத நெறியோ - இவர்களுடைய தலையிலெழுத்தோ அல்லது அறிவுக்கீனந் தானோ; இது பவம் நீங்கிடும் நெறிதரு பாங்கினைப் பழித்தல் இவனைவிட்டு ஒரு காலத்திலும் நீங்காமல் தொந்தித்துக்கொண்டு வருகிற பிறவித் துன்பங்கள் நீங்குகைக்கு ஏதுவாயுள்ள இந்தக் கன்மத்தின் பகுதிகளை எனக்கு ஆகாது இதுவென்று இதனைக்கைவிட்டு விடுகிற இது; நன்றி கொன்ற லன்றே - ழுஎந்நன்றி கொன்றார்க்கு முய்வுண்டா முய்வில்லைச், செய்ந்நன்றி கொன்றமகற்கு' என்று திருவள்ளுவதேவர் சொன்ன செய்ந்நன்றி கொன்ற இதுவா யிருக்கும். விரதத்துதித்த விவேகமதழித்தல் நன்றிகொன்ற லன்றே யென்று பொருள் கூட்டுக; அன்றியும் ஞானநீதியும் நான் மறை நீதியும் - இதன்றியும், லோகாசாரங்களும் நாலு வேதத்திற் சொல்லப்பட்ட ஆசாரங்களும் இவை; பாலர் உன்மத்தர் பசாசரி லெனவும் உறங்கினோன் கைவெறும் பாக்கெனவும் தானே தவிராது - யாதொன்றையும் விகற்பியாமல் நிருவிகற்பமாகக் காண்கிற பாலரைப்போலவும், வைதாரையும் வாழ்த்தினாரையுஞ் சுட்டியறியாத மதுபானஞ் செய்தவர்களைப்போலவும், ஆகாரம் நித்திரைபயம் மைதுனமென்கிற நாலுகாரியமுமில்லாத பசாசரைப் போலவும், நித்திரை செய்கிறவன் கையிலேபிடித்திருந்த பாக்குப்போலவும் உனக்குப்பிரமக்கியான மில்லாதபடியினாலே அந்த ஆசாரங்களும் தானாகப் போக அறியாது; ஆனால் புரியாது ஒழிந்திடின் நிரயத்து அழுந்துதல் திடமே - அவைதானே போகாதென்றால் இவன்தானே எனக்கு அந்த ஆசாரங்கள் வேண்டுவதில்லை யென்று விட்டால் தேகாந்தத்திலே மீளா நரகிலே |