பக்கம் எண் :

4. மாயாவாதி நிராகரணம்1207


உய்த்தோ னின்றி முத்தி யுரைத்தல்
பித்தோ பிரமஞ் செத்தோ பெறுவது
உடலையும் நீயே சடமெனச் சாற்றினை
240 வையினும் வாழ்த்தினுங் கொய்யினுங்கொளுத்தினும்
வணங்கினும் உதைப்பினும் பிணங்குதல் செய்யாப்
பிரமத் தன்மை பெறுவதெக் காலம்
இருக்கு நாள்சில எண்ணில் நூல் கதறித்
தருக்கம் பேசித் தலைபறி யுற்றுக்

போய்க் கிடந்து துக்கங்களை யனுபவிப்ப னென்கிறது தப்பாது; உய்த்தோ
னின்றி முத்தியுரைத்தல் பித்தோ - அந்த ஆசாரத்திலே உனக்குப்
பிரமக்கியானம் உண்டாகாமல் நான் முத்தன் என்று நீ சொல்லுகிறது பித்து
மேலிட்டுக் கொண்டோ; பிரமஞ் செத்தோ பெறுவது - இவன் இருக்கச்
செய்தே பிரமக்கியான முண்டாகவேணும தொழிந்து இவன் செத்துப்போய்
பிரமத்தைப் பெறப் போகிறதில்லை. அது ஏனென்னில்; உடலையும் நீயே
சடமெனச் சாற்றினை இந்த உடலினை நீதானே சடமென்று சொல்லி
வைத்தாய்; வையினும் வாழ்த்தினுங்கொய்யினுங் கொளுத்தினும்வணங்கினும்
உதைப்பினும் பிணங்குதல் செய்யாப் பிரமத் தன்மை பெறுவது எக்காலம்
ஒருவன் இவனை வைதவிடத்தும் வாழ்த்தினவிடத்தும் காலினைக் கையினைத்
தறித்தவிடத்தும் இவன் மேலே எண்ணெய்ச் சீலையைச் சுற்றி நெருப்பைக்
கொளுத்தினவிடத்தும் இவனைத் தெண்டன் பண்ணினவிடத்தும் கால்கொண்டு
உதைத்தவிடத்தும் இதம் அகிதப்படாமலிருக்கிற பிரமக்கியானம் இவனிடத்து
இற்றைவரை யளவாகக் காணப்பட்ட தில்லை. அந்தப் பிரமக்கியானம்
இவனுக்கு இனி எந்தக் காலத்திலே யுண்டாகப்படுவது; இருக்கும் நாள் சில
புருஷாயிசு நூறு. இதிலே பாதி நித்திரையிலே போம், நீக்கி நின்ற ஐம்பதிலே
வாலிபமாய்ப்போம் பதினைந்து. விருத்தனாய்ப்போம் பதினைந்து. நின்ற
இருபதிலே ஆலசமாய்ப்போம் சில நாள். இதற்கு நடுவே; எண்ணில் நூல்
கதறித் தருக்கம் பேசித் தலை பறியுற்று எண்ணிறந்த சாத்திரங்களை
யெல்லாங் கற்று அதுகொண்டு கண்டார் நின்றாரோ டெல்லாந் தர்க்கங்கள்
பேசி அதனாலே தலை பறியுண்டு;