பக்கம் எண் :

1208சித்தாந்த சாத்திரம் - சங்கற்பநிராகரணம்

245 கண்டோர் ஈந்த பிண்டமுண் டலறிப்
பல்நோய் யாக்கை தன்நோ யுற்றுடல்
விடவரும் என்று நடுநடு நடுங்கி
விட்டோர் தெய்வத் தொட்டின் றன்றியும்
யானே எவரு மானேன் என்றலின்
250 அவ்வவர் சீறி அவ்வவர் வாழ்நாள்
செவ்விதின் நிரயஞ் சேர்த்துவர் அதனால்
மாயா வாதப் பேயா உனக்குத்
தேவரில் ஒருவர் உண் டாக
மேவரு நரகம் விடுதலோ அரிதே.       4

கண்டோர் ஈந்த பிண்டம் உண்டு அலறி - இவர் நல்ல அத்தியான்மி
யென்று கண்டவர்கள் இடப்பட்ட அசனங்களைப் புசித்து பிரமக் கியானஞ்
சொல்லுகிறேனென்று அவரிடங்களிலேயுஞ் சிலவற்றைக் கூப்பிட்டு; பல்நோய்
யாக்கை தன் நோயுற்று உடல்விடவரும் என்று நடுநடு நடுங்கி - பல
நோய்களுங்கூடி ஒன்றாயெடுக்கப்பட்ட சரீரத்துக்கு அடைத்த வியாதி
இவனை வந்து பொருந்தின பொழுது இதனாலே நமக்குச் சாக்காடு வரு
மென்று பதைபதை பதைத்து; விட்டோர் தெய்வத் தொட்டின்று அன்றியும் -
உடல்விடுகிற காலத்து நீ பயப்படாதே நான் உண்டென்று சொல்லி உன்னை
இரட்சித்துக் கொள்ளுகைக்கு ஒரு தெய்வதொந்தனையு மில்லையாயிருக்கிறது.
அன்றியும்; யானே எவருமானேன் என்றலின்கான்தானே பிரம்மாவும்
விட்டுணுவும் உருத்திரனும் இந்திரனும் இயமராசனும் மற்றுமுள்ளவர்களெல்
லாருமாயிருந்தேனென்றுஞ்சொல்லுகையால்; அவ்வவர் சீறி அவ்வவர் வாழ்
நாள் செவ்விதின் நிரயஞ் சேர்த்துவர் - அந்தந்தத் தேவதைகள் நம்மை
யெல்லாம் இவன் தானென்று சொன்னானென்று உன்னோடே கோபித்துக்
கொண்டு தங்களுக்குச் சொல்லா நிற்கிற காலங்களெல்லாம் நன்றாகக்
கொண்டு ஆழ்ந்த நரகங்களிலே தள்ளிவிடாநிற்பர்கள்; அதனால்
மாயாவாதப் பேயாஉனக்குத் தேவரில் ஒருவர் உண்டாக மேவரு நரகம்
விடுதலோ அரிதே - அங்ஙனமிருக்கையால் மாயாவாத மென்கிற பேய்ச்
சமயத்தையுடைவனே, உனக்கு எல்லாருஞ் செத்துப் போய்த் தேவவர்க்
கத்திலே ஒருத்தர் இருந்தாராயினும் ஒருவராலுங் கிட்டுதற்கரிதாயிருக்கிற
நரகம் உனக்கு விட்டு நீங்குதலுண்டாகாதென் றறிவாயாக.              4