பக்கம் எண் :

1209


5. *ஐக்கியவாதி சங்கற்பம்

அரிதேர்ந் துணராப் பெரியோன் உரைத்த
பதிபசு பாசம் விதிமுறை கிளக்கில்
ஈசன் ஏகன் எண்ணிலி பசுக்கள்
பாசம் இருவகைப் பரிசின துலகத்
5 தாயவன் உயிர்க்கு மாயையின் அருளால்
இருவினைத் தகையின் உருவினைத் தருமால்
கருமுகில் அடர இரிதரு கதிர்போன்று
அறிவாம் உயிரிற் பிறியா தேயும்

      மேல் ஐக்கியவாதி தன் மதம் கூறுகின்றான்:

     (உரை) அரி தேர்ந்து உணராப் பெரியோன் உரைத்த பதி பசு பாசம்
விதிமுறை கிளக்கில் விட்டுணுவானவன் பூமியெல்லாங்கீன்று ஆராய்ந்து
பார்த்தவிடத்து இப்படியிருக்கும் இவனுடைய சொரூப மென் றறியப்படாத
பெரியவனென்று சொல்லப்பட்டிருக்கிற சிவனாலே அருளிச் செய்யப்பட்ட
பதியினது உண்மையினையும் பசுவினது உண்மையினையும் பாசத்தினது
உண்மையினையும் உள்ளபடி சொல்லுமிடத்து; ஈசன் ஏகன் எண்ணிலி
பசுக்கள் பாசம் இருவகைப்பரிசினது - பதியென்று சொல்லப்பட்ட பரமேசுரன்
ஒரு முதலாயிருப்பா னொருத்தன், பசுவென்று சொல்லப்பட்ட ஆன்மாக்கள்
பல முதலா யிருப்பதொன்று, பாசமென்று சொல்லபட்டது மாயை என்றும்
2கன்மம் என்றும் இரண்டு வகைப்பட்டிருப்பதொன்று; உலகத் தாயவன்
உயிர்க்கு மாயையின் அருளால் இருவினைத் தகையின் உருவினைத் தரும்
ஆல் - பிரபஞ்சத்துக்கு மாதாவாயுள்ள சிவன் தனது காருண்ணியத்தினாலே
ஆன்மாக்களுக்குப் புண்ணிய பாவங்களுக் கீடான சரீரங்களை மாயையிலே
நின்றுங்கொடாநிற்பன். ஆல் - அசை; கருமுகில் அடர இரிதரு கதிர்
போன்று அறிவாம் உயிரிற் பிறியாது ஏயும் கறுத்த மேகமானது பிரகாசத்தி
னையுடைய ஆதித்தனிடத்திலே சென்று பொருந்தின விடத்து அந்த
ஆதித்தனுடைய கிரணங்களெல்லாம் நீங்கின தன்மை போல முதலே
சுத்தமாய் அறிவாயிருக்கிற ஆன்மாவினிடத்திலே


     1. அயிக்கவாதி, ஈசரவைக்கவாதம்.
     2. மாமாயை யென்றும் கன்மென்றும் மூன்று - பாடபேதம்.