10 | ஈட்டும் இருபயன் ஊட்டிடும் நியதி ஒருபோ திருபயன் நுகர்வுற மருவுதல் இன்மை 1யாதல் முன்னிய காலைச் சத்தி னிபாதம் உற்றிறை யருளால் உருவுகொ டுலகு தெரிவுற மருவி மாசுறு தூசு தேசுற விளக்குந் | | 15 | தன்மையின் உணர்த்தும் புன்மைகள் நீங்கி நீரும் நீரும் சேருந் தகைமையின் அறிவினோ டறிவு செறிவுறப் பொருந்தி ஒன்றாம் என்பதை உலகோர் நன்றா முத்தி எனநவிற் றினரே. | அந்த மாயா தேகம் ஒருகாலும் நீங்காமற் பொருந்தி வாராநிற்கும்; ஈட்டும் இருபயன் ஊட்டிடும் நியதி - முன்னே செய்த புண்ணிய பாவங்களை இந்தச் சரீரத்திலே கர்த்தாவானவன் இவனுக்கு நாடோறும் பொசிப்பியாநிற்பன்; ஒரு போது இருபயன் நுகர்வுற மருவுதலின்மையாதல் முன்னிய காலை - புண்ணிய பாவ மிரண்டுந் துலையொத்து ஒரு சனனத்திலே எல்லாக் கன்மங்களும் பொசித்துத் தொலையத் தக்கதாக ஏதேனுமொரு சிவபுண்ணியம் வந்து எதிர்ப்பட்ட அவதரத்து; சத்தினிபாதம் உற்று - இவனுக்குச் சத்தினிபாத மென்பதொன்று உண்டாய், அந்த அவதரத்திலே; இறையருளால் உருவு கொடு உலகு தெரிவுறமருவி கர்த்தாவானவன் தனது காருண்ணியமே தனக்குத் திருமேனியாகக் கொண்டுடருளி உலகத்திலுண்டான வர்களெல் லாருங் காணத்தக்கதாக ஆசாரியனாக எழுந்தருளி வந்து; மாசுறு தூசு தேசுற விளக்குந் தன்மையின் உணர்த்தும் - அழுக்கினாலே மிகுந்திருக்கிற புடைவையை நன்றாக வெள்ளாவி வைத்து அந்த அழுக்கை நீக்கித் துய்தாக வெள்ளையாக்கின தன்மைபோல இவனிடத்துண்டாகிய பாசங்களைத் தீக்ஷைபண்ணிக் கிரமத்திலே போகத்தக்கதாக உபதேசங்களை யருளவே; புன்மைகள் நீங்கி நீரும் நீரும் சேருந் தகைமையின் அறிவினோடு அறிவு செறிவுறப் பொருந்தி ஒன்றாம் - இவனிடத்து உண்டாகிய குற்றங்களெல்லாம் நீங்கிச் சுத்தனாகித் தண்ணீரும் தண்ணீரும் தன்னிலேகூடி ஐக்கியமாய் ஒன்றுபட்டு நின்ற தன்மைபோலச் சிவனுடைய அறிவோடே
1. யாதென - பாடபேதம். |