6. ஐக்கியவாதி நிராகரணம் | | முத்தி என்பதை எவனோ சுத்த அறிவெனிற் பாசம் செறியா மாயை உருஇரு வினையால் வரும்இரு வினையும் உருவா லன்றி மருவா திவற்றின் | | 5 | முந்திய தேதோ வந்தணை வதற்கோர் ஏது வேண்டும் தான்இயல் பென்னின் | தன்னுடைய அறிவு கூடி ஐக்கியம் பிறந்து ஒன்றுபட்டு நிற்கும்; என்பதை யுலகோர் நன்றா முத்தியென நவிற்றினரே - என்று இங்ஙனஞ் சொல்லப் பட்டதை உயர்ந்தோராயுள்ளவர்கள் முத்திகளெல்லாவற்றிலும் வைத்துக் கொண்டு இதுவே நல்ல முத்தியென்று சொல்லா நிற்பார்கள். 5 மேல் பாடாணவாதி மறுக்கிறான்: (உரை) முத்தி யென்பதை எவனோ - இதை நீ முத்தி யென்று சொன்னது என்னதான், அது பின்பு சொல்லுகிறோம்; சுத்த அறிவெனிற் பாசம் செறியா - ஆன்மா அனாதியிலே சுத்தமுமாய் அறிவுமா யிருக்கு மென்று சொல்லின் நடுவே ஓர் அவதரத்திலே சுத்தமாயிருக்கிற ஆன்மாவைப் பாசம் வந்து பொருந்துகைக்கு வழக்கில்லை; மாயையுரு இருவினையால் வரும் - இந்த மாயா சரீரமானது இவனை வந்து பொருந்து மிடத்து இவன் முன்னே செய்த புண்ணிய பாவங்களுக் கீடாக வந்து பொருந்துவ தொழிந்து தானாக வந்து கூடாது; இரு வினையும் உருவாலன்றி மருவாது - அந்தப் புண்ணிய பாவங்கள்தான் உண்டாமிடத்து ஒரு மாயா சரீரமுண்டாய் அதிலுண்டாகிய திரிவிதகரணங்களினாலே இவன்செய்து கொள்ள உண்டாவதொழிந்துதானே யுண்டாகாது. ஆகையால்; இவற்றின் முந்தியது ஏதோ - இந்த மாயை கன்ம மிரண்டினும் வைத்துக்கொண்டு இவனை முந்த வந்து கூடின பாசம் எதுதான்? இதன்றியும்; வந்து அணைவதற்கு ஓர் ஏது வேண்டும் - இந்தப் பாசங்கள் நடுவே ஓர் அவதரத்திலே இவனைவந்து பொருந்துமென்பதற்கு அனாதியிலே இவனுக்கு மலமென்ப தொன்று உண்டாய் அது காரணமாக வந்து கூடிற்றென்று சொல்ல வெண்டும்; தான் இயல்பென்னின் - அப்படி மலமென்பது ஒன்று |