| | வீடுற் றவரினுங் கூடக் கூடும் ஈங்கிவை நிற்க நீங்காக் கருவிகள் கொண்டறி வறியக் கண்டது மன்றி | | 10 | மருவிய உருவு துயில்பெருங் காலைச் சிறுபொறித் தறுகட் கறையணற் சுடிகைத் துத்திக் கடுவுள் துளையெயிற் றுரகக் கொத்தயல் கிடப்பினுங் குவைதரு நவமணி ஒருபாற் றுதையினும் பெருகார் வத்தினோடு | இல்லை, இந்தப் பாசங்கள்தான் நடுவே வந்து இவனைப் பொருந்தினது வெள்ளைப்புடவைக்கு அழுக்கேறினாற்போல இயல்பாக வந்து பொருந்து மென்று நீ சொல்லில்; வீடுற்றவரினுங் கூடக் கூடும் - இந்த மாயா கன்மங்கள் நீங்கி மோக்ஷத்தைப் பெற்றிருக்கிறவர்களிடத்திலும் இந்த மாயா கன்மங்கள் இயல்பாக வந்து பொருந்தப்படும்; ஈங்கு இவை நிற்க - இவ்விடத்து நான் சொன்னதற்கு ஓர் உத்தரமும் உனக்குச் சொல்லக்கூடாது. ஆகையால் இவை நிற்க; நீங்காக் கருவிகள் கொண்டு அறிவு அறியக் கண்டதுமன்றி - அனாதியிலே உன்னைவிட்டு நீங்காமல் நிற்கிற மலசம்பந்தத்தை இந்த மாயாகருவிகள் வந்து நீங்க அந்தக் கருவிகளைக் கொண்டு உன்னுடைய அறிவு சத்தாதி விஷயங்களை யறிந்து வருகிறது பிரத்தியக்ஷமாகக் கண்டிருக்கச்செய்தேயும் மலமென்பதொன்று இல்லை யென்றாய் இதன்றியும்; மருவிய உருவு துயில் பெருங் காலை - அனாதியே இவனுக்கு மலமென்ப தொன்று இல்லை நடுவே இயல்பாக வந்து பொருந்திற்றென்று நீ சொன்ன இந்த உடம்பு இவன் நித்திரை செய்கிற அவதரத்து; சிறுபொறித் தறுகட் கறை அணல் சுடிகைத்துத்திக் கடுவுள் துளையெயிற்று உரகக்கொத்து அயல் கிடப்பினும் உடம்பிலே சிறிதாயிருக்கிற பொறிகளையு முடையதாய் தறுகண்மையினையு முடையதாய் கறுத்திருக்கிற கண்டத்தினையுந் தலையிலே துத்தியினையு முடையதாய் உள்ளே துளையாயிருக்கிற பல்லுகளிலே நஞ்சினையு முடையதாயிருக்கிற பாம்பினது கூட்டங்கள் ஒருபக்கத்திலே வந்து கிடந்ததாயினும்; குவைதரு நவமணி ஒருபால்துதையினும் - கூட்டமாக நவரத்தினங்கள் ஒருபக்கத்திலே மிகவுங்கிடந்ததாயினும்; பெருகு ஆர்வத்தினோடு அச்சமும் அணுகாக்கொச் |