பக்கம் எண் :

6. ஐக்கியவாதி நிராகரணம்1213


15 அச்சமும் அணுகாக் கொச்சமை என்னோ
கருவி யாவும் பிரிவுறு நிலையேற்
பொறிபுல னாதி குறைவற நிறைந்து
காட்சிய தளிக்கு மூட்சியின் முன்னாக்
கொடுத்தோர் ஆழி 1விடுத்தவன் நாடிக்
20 கொள்வோர்க் காணா துள்கி மீண்டுழித்
தந்தவற் கண்டாங் கந்தமில் அதனைத்
தருக என்னும் பெருமதி பிறங்குமது
அறிவி லாமைஎன் றனை அது மலமாக்

சமை என்னோ - இந்த ரத்தினங்கள் கிடக்கிறதைக் கண்டு மிகவும் பிரியம்
வாராமலும் அந்தப் பாம்புகள் கிடக்கிறதைக் கண்டு மிகவும் அச்சம்
வாராமலுமிருந்த இந்த அறியாமை இதென்னதான்; கருவியாவும் பிரிவுறு
நிலையேல் - எல்லாக் கருவிகளும் நீங்குகையினாலே அவ்விடத்தில் விருப்பு
வெறுப்புக் காணப்பட்டதில்லையாகில் பொறிபுலனாதி குறைவற நிறைந்து
காட்சியது அளிக்கும் மூட்சியின்; பொறியும் புலனுமாதியாயுள்ள கருவிக
ளெல்லாம் ஒன்றுங் குறையாமல் நிறைந்து நின்று இவனுக்கு அறிவைக்
கொடுக்க இவனுடைய அறிவு சத்தாதி விஷயங்களிலே மூண்டு சீவியா
நிற்கிற அவதரத்திலே; முன்னாக் கொடுத்து ஓர் ஆழி விடுத்தவன் நாடி
கொள்வோர்க்காணாது உள்கி மீண்டுழித் தந்தவற் கண்டு ஆங்கு அந்தமில்
அதனைத் தருக என்னும் பெருமதி பிறங்கும் - அரை நாழிகைக்கு முன்னாக
ஒருத்தன் கையிலே ஒரு மோதிரத்தைக் கொடுத்து இந்த மோதிரத்தை
விற்றுக்கொண்டு வாருமென்று சொல்லிப் போக விட அந்த மோதிரத்தைக்
கொள்வோ ரொருத்தரையுங் காணாமல் இந்த மோதிரம் நம்முடைய
கையிலே வைத்துக்கொண்டிருக்கக் கடவோமல்ல வென்று விசாரித்து உடனே
உன்னிடத்திலே மீண்டு வந்து அவன் தந்த மோதிரத்தை வாங்கி வைத்துக்
கொண்டு பின்னும் அரை நாழிகைக்குள்ள அந்த மோதிரந் தந்தவனைக்
கண்டு நான் முன்னே உம்முடைய கையிலே விற்கத் தந்த விலைமதிக்க
வொண்ணாத மோதிரத்தைத் தருவீராக வென்று சொன்ன புத்திப் பெருமை
மிகவும் உண்டானது என்ன தான் ! பெருமதி யென்றது ஆசியச் சொல்லு;
அது அறிவிலாமை யென்றதனை - அப்படி இவனுக்கு


     1. விடுத்ததை - பாடபேதம்.