| 25 | குறிகொ ளாளர் அறைகுவ ரன்றே அறிவிற் கறிவு செறியவேண் டின்றே | 30 | உண்மையில் இருமையும் ஒளியே எனில்ஒரு தன்மை யாகமுன் சாற்றின ரிலரே முன்பு நன்றுடன் ஒன்றிய காலை இன்பம் எய்துதற் கிலதுயிர் ஆதலின் நீயலை பொருத மாயா வாதி ஆயினை அமையும் அருள்நிலை கேண்மதி. 6 | மயக்கம் வந்தது அறியாமைகொண்டு என்று சொல்லில்; அது மலமாக் குறிகொளாளர் அறைகுவரன்றே - அப்படி அறியாமையென்று நீ சொன்னது தன்னைக் காண் ஆணவமலமாகக்கொண்டு திரிபதார்த்த நிண்ணயம் வந்த பெரியோர்கள் சொல்லுவார்கள். அன்றென்றது ஆமென்றதெனக் கெள்க. இது ஐக்கியவாதியுடைய பெத்தநிலையை மறுத்தது. மேல் முத்தி நிலையை மறுக்கிறான்: அறிவிற்கு அறிவு செறிய வேண்டின்றே - ஆன்மா அறிவேயாயிருக்கில் வேறே ஓரறிவோடே சென்று கூடவேண்டுவதில்லை. இதன்றியும்; உண்மையில் இருமையும் ஒளியே யெனில் - முத்தியில் நீரும் நீரும் கூடினாற்போலப் பதியும் பசுவும் இரண்டுங் கூடிப் பிரகாசமாயிருக்குமென்று நீ சொல்வில்; ஒரு தன்மையாக முன் சாற்றினர் இலரே - அவன் சர்வக்கியன் இவன் கிஞ்சிக்கியன், அவன் பரிபூரணன் இவன் ஏகதேசி, அவன் நிர்மலன் இவன் மலசகசன், அவன் பதி இவன் பசு: இப்படி யிருக்கையால் சிவனையும் ஆன்மாவையும் ஒரு தன்மையாகக் கொண்டு இதற்கு முன்பு ஒருவருஞ் சொன்னவர்களில்லை; முன்பு நன்றுடன் ஒன்றிய காலை இன்ப மெய்துதற்கு இலது உயிர் ஆதலின் - அனாதியே சுத்தமாயிருக்கிற ஆன்மா பின்பு கூடின அசுத்தங்கள் நீங்கி முத்தியிற் சிவனோடு கூடி இன்பத்தை அனுபவிக்குமென்றாய். இந்த மாயா கன்மங்கள் கூடுதற்கு முன்னே ஆன்மா சிவனோடு கூடி நிற்கச் செய்தே இன்பத்தை அனுபவிக்கக் கண்டோ மில்லையே. ஆகையால்; நீயலை பொருத மாயாவாதியாயினை அமையும் அருள்நிலை கேள்மதி - நீயும் பிரமந்தானே குடாகாச மாகாசம் போல நின்று இந்த உடல் நீங்கின அவதரத்து இரண்டு பிரமமும் ஒன்றாய் நிற்குமென்று |