8. பாடாணவாதி நிராகரணம் | | வகுத்துரை பெருகத் தொகுத்திடு முத்தி நன்று நன்றிருள் ஒன்றிய மலத்தாம் உளத்திற் குறுபொறி செறிபுலன் நுகர்தல் விளக்கிற் றிகழும் மேன்மைய தன்றே | | 5 | கருவிகள் அகல்வுழி மருவிய துயரமும் நன்றென லாகுந் துன்றிய படலத் திடைதடைப் பட்ட சுடர்விழி மாந்தர் படலம் நீங்குதல் கடனா தலினே | துயர மாட்சியை முத்தியென வகுத்தனரே - அவ்விடத்துச் சுட்டிக் காண்கைக்கு ஒரு காட்சியும் இல்லையாய்ச் சுகதுக்கங்களினுடைய அனுபோகங்களும் இல்லையா யிருக்கிற அவதரத்தை முத்தியென்று நல்லோர்கள் சொல்லாநிற்பர்கள். 6 மேல் பேதவாதி மறுக்கிறான் : (உரை) வகுத்து உரை பெருகத் தொகுத்திடு முத்தி நன்று நன்று இருள் ஒன்றிய மலத்தாம் - சொல்லைப் பலவாக வகுத்துச் சில திட்டாந் தங்களையுஞ் சொல்லி முடிவில் ஆணவ மலத்தோடுங் கூடிநிற்கிற கேவலக் கிடையை முத்தியென்று நீ சொன்னது நல்லது. இப்படி ஒருத்தருஞ் சொன்னவர்களில்லை. நன்று நன்றென்றது ஆசியச் சொல்லு; உளத்திற்கு உறுபொறி செறிபுலன் நுகர்தல் விளக்கில் திகழும் மேன்மையதன்றே - சகலத்தில் ஆன்மாவுக்குப் பொருந்தப்பட்ட இந்திரியங்கள் காட்டாக அந்த ஆன்மாச் செறிந்திருக்கிற சத்தாதி விஷயங்களைப் பொசித்துக்கொண்டு வருகிறது கண்ணுக்கு விளக்கானது காட்டக் கண்டு வருகிற தன்மை போலுமாகையாற் சகலம் குற்றமறச் சொன்னாய்; கருவிகள் அகல்வுழி மருவிய துயரமும் நன்றெனலாகும் - விளக்குப்போல இவனுக்குக் காட்டாக நிற்கிற கருவிகள் நீங்கினவிடத்து ஆணவமலத்திலே அழுந்திக் கிடக்கிற கேவலமும் முன்னே சொன்ன சகலம்போல நன்றென்று சொல்லலாமாகும். அது எதுகொண்டு என்னில்; துன்றிய படலத்திடை தடைப்பட்ட சுடர்விழி மாந்தர் படலம் நீங்குதல் கடன் ஆதலினே - மிக்க படலத்தினாலே நடுவே காட்சி தடைப் |