பக்கம் எண் :

1216சித்தாந்த சாத்திரம் - சங்கற்பநிராகரணம்

7. பாடாணவாதி சங்கற்பம்

5 மூல மலத்தாற் சாலு மாயை
கருமத் தளவில் தருமுரு இறைவன்
செறிந்திரு பயனும் நுகர்ந்திடும் உயிர்கள்
இருளுறு மலத்திற் பருவரற் படுதலின்
10 இடைஇரு நோக்குந் தடைபட் டோரில்
துயருறும் அதனாற் செயிருறு துன்பம்
கொத்தை மாந்தர் உய்த்துறுந் துயில்போற்
காட்சி என்னக் காணாத் துயர
மாட்சியை முத்தி எனவகுத் தனரே.     7

உன்னோடே வழக்கிட்டுக்கொண்ட மாயாவாதிதானாய் விட்டாய். ஆகையால்
நீ சொன்ன தெல்லாம் அமையும். மேல் திருவருளினது உண்மையை நான்
சொல்லக் கேட்பாயாக. மதியென்றது அசை.

     மேல் பாடாணவாதி தன் மதம் கூறுகின்றான்:

     மூல மலத்தாற் சாலும் மாயை - அனாதியே ஆன்மாவுக்கு ஆணவமல
மென்பதொன்று உண்டு. அந்த மலத்தைப் போக்குகை நிமித்தமாக மாயை
அவனைவந்து பொருந்தும்; கருமத்தளவில் தரும் உரு இறைவன் - ஆன்மா
முன்னே செய்த கன்மத்துக் கீடான சரீரங்களைக் கர்த்தாவானவன்
கொடுப்பன்; செறிந்து இரு பயனும் நுகர்ந்திடும் உயிர்கள் - அந்தச்
சரீரங்களைப் பொருந்தித் தங்களுக்கு உண்டான புண்ணியபாவ மிரண்டையும்
உயிர்களானது பொசித்து வாராநிற்கும்; இருளுறு மலத்திற் பருவரற்படுதலின்
- இப்படி அனுபவித்து வரச்செய்தே ஆணவ மலத்தினாலே மறைப்
புண்கையினாலே; இடை இரு நோக்கும் தடைபட்டோரில் துயர் உறும் -
முன்பு கண்டு வந்த கண்ணானது நடுவே காசம் மேலிட்டு இதனாலே
கானாமலிருந்தவர்களைப்போல அவத்தைப்படும்; அதனாற் செயிர் உறு
துன்பம் - அப்படி அவத்தைப்பட்டு வருகையினாற் குற்றத்தை யுடைத்தாகிய
பிறவித் துக்கமானது மேன்மேலும் உண்டாகாநிற்கும். இது பெத்தம்.

     கொத்தை மாந்தர் உய்த்துறுந் துயில்போல் - அஞ்ஞானிகளாக
இருக்கிற ஆன்மாக்கள் எல்லா அவத்தைகளும் நீங்கி அதீதாவத்தையிலே
அழுந்திக் கிடக்குந் தன்மைபோல; காட்சி யென்னக் காணாத்