பக்கம் எண் :

9. பேதவாதி சங்கற்பம்1217


10 காட்சி யென்னக் காணாத் துயர
மாட்சியை முத்தி எனவகுத் துரைக்கிற்
15 கரணா பாவம் மரணம் கருமரம்
ஏய்ந்தவர் முத்தி சேர்ந்தவ ரன்றே
இனைய கதிக்கோர் முனைவரும் வேண்டா
தனிதரு துயரம் எனும்இது திடனே
பாடா ணத்திற் கூடா முத்தி.     8

9. பேதவாதி சங்கற்பம்

ஈசன தருளாற் பாசத் தொகுதி
செறிவுறு செம்பிற் கரையுறு களிம்பு

பட்ட கண்ணினையுடைய ஆன்மாக்களுக்குப் பின்பு ஓர் அவதரத்திலே
அவுஷதப் பிரயோகங்களினாலே அந்தக் கண்ணிற் படலம் நீங்குகிறது
முறைமையா யிருக்கையினாலெனக் கொள்க. இது பெத்தத்தை மறுத்தது.

    காட்சி யென்னக் காணாத்துயர மாட்சியை முத்தியென வகுத்துரைக்கில் -
சுட்டிக் காணுதற்கு ஒரு காட்சியுமின்றித் துக்கங்களினுடைய அனுபோகங்களு
மின்றி யிருக்கிற இந்த அவதரத்தை முத்தியென்று நீ பலவாக வகுத்துச்
சொல்லில்; கரணாபாவம் மரணம் கருமரம் ஏய்ந்தவர் முத்திசேர்ந்தவர்
அன்றே - கரணங்களினுடைய பிறவினைப் பொருந்தினவர்கள் மரணம்
பொருந்தினவர்கள் கருவைப் பொருந்தினவர்கள் மரங்களைப் பொருந்தி
னவர்கள் இவர்கள் இத்தனை பேரும் முத்தியைப் பொருந்தினவர்களாக
வேண்டும்; இனைய கதிக்கு ஓர் முனைவரும் வேண்டா - இப்படிக் கொத்த
முத்தியைப் பெறுகைக்கு ஓர் ஆசாரியனும் வேண்டுவதில்லை; தனிதருதுயரம்
எனும் இது திடனே - இந்த முத்தி எல்லாக் கருவிகளும் நீங்கி ஆணவமலத்
தோடுங்கூடி ஒன்றுமறியாமற் கிடக்கிற கேவலத்துயரமென்பது தப்பாது.
ஆகையால்; பாடாணத்திற் கூடாமுத்தி கல்லுப்போலே ஒன்றும் அறியாமற்
கிடக்கிறது முத்தியென்று சொல்லப்படாது. இது பாடாணவாதி முத்தியை
மறுத்தது.

     மேல் பேதவாதி தன் மதம் கூறுகின்றான்:

     ஈசனது அருளாற் பாசத் தொகுதி செறிவுறு செம்பிற் கறையுறு களிம்பு
குளிகைதாக்க ஒளிபெற்றாங்கு அன்னுவயம்: