பக்கம் எண் :

1218சித்தாந்த சாத்திரம் - சங்கற்பநிராகரணம்

20 குளிகை தாக்க ஒளிபெற் றாங்கு
நித்த சுத்த முத்த ராக
வைத்தனர் உலகில் மறைவல் லோரே.

10. பேதவாதி நிராகரணம்

மறைக ளாகமத் துறைகள்மற் றெவையும்
நாசமில் பதிபசு பாசமென் றுரைத்தல்
அயர்த்தோர் குளிகைச் சயத்தால் தாமிரக்
காளித நாசம் பாசத் தேய்த்தல்

செறிவுறு செம்பிற் கறையுறு களிம்பு குளிகை தாக்க ஒளி பெற்றாங்கு
ஈசனதருளாற் பாசத் தொகுதி என மாறுக. இதன் பொருள்: குளிகைக்குள்ளே
செறிந்துகொண்டிருக்கிற செம்பிடத்துண்டாகிய கருமை பொருந்தியிருக்கிற
காளிதமானது இரதகுளிகை சென்று கூடினவிடத்து அந்தக் காளிதம் கெட்டுப்
பத்துமாற்றுப் பொன்னான தன்மைபோலப் பக்குவப்பட்ட ஆன்மாக்களுங்
கர்த்தாவினுடைய காருண்ணியத்தினாலே ஆணவம் மாயைகாமியமென்று
சொல்லப்பட்டு வருகிற மலங்களினது கூட்டங்கெட்டு; நித்த சுத்த முத்தராக
வைத்தனர் உலகில் மறைவல்லோரே - அழியாததாய் நிர்மலமாயிருக்கிற
முத்தியினைப் பெற்றுப் பெறுவானும் பேறுமாயிருப்பார்களென்று சொல்லி
வைத்தனர் உலகத்தின் கண்ணேவேதத்தினுடைய உண்மையைப் பொருந்தின
பெரியோர்கள்.                                               9

     மேல் சிவசமவாதி மறுக்கிறான்:

     (உரை) மறைகள் ஆகமத் துறைகள் மற்று எவையும் - நாலு
வேதங்கள்முதல் ஆகமமும் வேதாகமங்களினதுவழிகள் புராணங்கள்
மற்றுமுண்டான சாத்திரங்கள் இவையெல்லாம்; நாசம் இல் பதி பசு பாச
மென்று உரைத்தல் - பதிக்கும் பசுவுக்கும் பாசத்துக்கும் அழிவில்லையென்று
சொல்லுகிறதை; அயர்த்து ஓர் குளிகைச் சயத்தால் தாமிரக் காளித நாசம்
பாசத்து ஏய்த்தல் கூடாது - நீ இப்பொழுது மறந்துவிட்டு, ஓர் இரத
குளிகையினது சாமர்த்தியத்தினாலே செம்பிலுண்டாகிய காளிதமானது
கெட்டுப் போகிறதைப் பாசத்துக்கு நீ உவமையாகச் சொன்னது சாத்திர
விரோதமாகை