பக்கம் எண் :

11. சிவசமவாதி சங்கற்பம்1219


5 கூடா தன்றியும் குளிகை சீருணம்
நீடா தழித்த 1நிலைஇலை ஆதலிற்
பேத வாதம் ஓதுதல் பிழையே
இன்னும் இன்னுயிர் ஏமங் குளிகை
தன்னில் அன்னியந் தருவது திடமே
10 வீடித் திறத்தினிற் கூடக் கூடா.       10

11. சிவசமாவாதி சங்கற்பம்

பாசமும் பசுவும் ஈசனும் என்றிம்
மூவகை உணர்வு தாம்முதன் மையவாய்ப்

யால் பாசங் கெடுமென்கிறது அர்த்தமாகாது; அன்றியும் குளிகை சீருணம்
நீடாது அழித்த நிலை இலையாதலிற் பேதவாதம் ஓதுதல் பிழையே - பாசம்
கெடுமென்று சொன்ன தோஷமன்றியும் இரத குளிகையானது செம்பை
நிலைநிற்கவொட்டாமல் அதை யழித்துப் பொன்னாக்கின திட்டாந்தநிலை
உனக்குத் தாட்டாந்தத்து இல்லையாகையால், பசுமுதல் கெடாது பெறுவானும்
பேறுமாயிருக்கு மென்று நீ முன்னே பேதவாதஞ் சொன்னது பழுதாம்;
இன்னும் இன் உயிர் ஏமம் குளிகை தன்னில் அன்னியந் தருவது திடமே
அன்றியும் இன்னமும் ஒரு குற்றமுண்டு. அது என்னெனில், செம்பானது
தன்னைச் சுத்தமாக்கின குளிகையு மாகாமல் தன்னுடைய தன்மையுங் கெட்டு
நடுவே பொன்னான தன்மைபோல ஆன்மாவுந் தன்னைச் சுத்தமாக்கின
சிவனுடைய சொரூபமுமாகாமல் தன்னுடைய தன்மையும் கெட்டுவேறே ஒரு
சொரூபமாகவேண்டும். ஆகையால் அது குற்றமுண்டென்றது தப்பாது; வீடு
இத்திறத்தினில் கூடக் கூடா - மோக்ஷமென்கிறது செம்பும் இரதகுளிகையும்
போலுமென்று நீ சொன்னவகையிற் கூடுமென்கிறது உண்டாகாது.

     மேல் சிவசமவாதி தன் மதம் கூறுகின்றான்:

     பாசமும் பசுவும் ஈசனும் என்று இம் மூவகை யுணர்வுதாம்
முதன்மையவாய் - பாசமென்றும் பசுவென்றும் பதியென்றும் சொல்லப்பட்டு
வருகிற மூன்று முதலுக்கும் பாசஞானமென்றும் பசு


     1. நிலைநிலை - பாடபேதம்.