| 5 | பாசம் ஐம்புலன் தேசுற உணர்த்தப் பசுத்தனி ஞானம் பொசித்திடு மன்றே இனைய ஞானம் பிரிவுற எரியாச் | 10 | செந்தழல் தகும்நெறி அந்தம்இல் உயிரும் அறிவாய் ஒன்றும் அறியா தன்றே இவ்வாறு ஒழுகும் ஏனைய உயிர்க்கு முன்னோன் தனது முதிர்ஒளி ஞானம் அறியாப் பச்சைச் சிறுபுழுக் கவர்ந்த வண்டென உயிரைக் கொண்டிடும் உயிர்அது தன்னை நோக்கித் தான் அது வாகி | ஞானமென்றும் பதிஞானமென்றும் சொல்லப்பட்ட மூன்றுவகை ஞானமும் அனாதியே யுள்ளதொன்றாயிருக்கையால்; பாசம் ஐம்புலன் தேசுற உணர்த்தப் பசுத் தனிஞானம் பொசித்திடுமன்றே பாசஞானமானது இந்திரியங்களைப் புலனாகிய சத்தாதி விஷயங்களை மயக்கமற அறிவிக்கப் பசுவுக்கு உண்டாகிய ஒப்பில்லாத ஞானமானது அந்த விஷயங்களைப் பொசித்து வாராநிற்கும்; இனைய ஞானம் பிரிவுற எரியாச் செந்தழல் தகும் நெறி அந்தம் இல் உயிரும் அறிவாய் ஒன்றும் அறியாதன்றே - இந்த இரண்டுவகை ஞானமும் நீங்கினவிடத்துக் கொழுந்துவிட் டெரியாமற் சும்மா கிடக்கிற சிவந்த தழலை யொக்குமென்று சொல்லலாமாக அவத்தையில் அழிவில்லாம லிருக்கிற ஆன்மாவும் அறிவா யிருக்கச்செய்தே இதுவென்று ஒன்றைச் சுட்டியறியும் பகுதி இதற்கு உண்டாகாது. இது பெத்தம். மேல் முத்தி: இவ்வாறு ஒழுகும் ஏனைய உயிர்க்கு - இப்படியே நாடோறும் கேவல சகலப்பட்டு வருகிற இந்த ஆன்மாவுக்கு; முன்னோன் தனது முதிர் ஒளி ஞானம் - மூன்று முதலுக்குள்ளே முதன்மையாகிய சிவனுடைய மிக்க அறிவாயிருக்கிற ஞானமானது; அறியாப் பச்சைச் சிறுபுழுக் கவர்ந்த வண்டென உயிரைக் கொண்டிடும் - ஒன்று மறியாமற் கிடக்கிற பச்சை நிறத்தினையுடைய சிறிய புழுவினை வந்து எடுத்துக்கொண்ட வேட்டுவாளியைப்போல்ஒன்றும் அறியாத ஆன்மாவை வந்து எடுத்துக் கொள்ளாநிற்கும்; உயிர் அது தன்னை நோக்கித் தான் அதுவாகி - புழுவானது தன்னை எடுத்து |