பக்கம் எண் :

11. சிவசமவாதி சங்கற்பம்1221


15 ஐவகைத் தொழிலும் மெய்வகை உணர்வும்
பிரியா வாறு பெற்றுத்
திரியாப் பெரியோர் திரட்சிசேர்ந் திடுமே.      11

12. சிவசமவாதி நிராகரணம்

5 சேர்ந்த மும்மை வாய்ந்த ஞானமும்
ஒருகா லன்றித் திரிவுற நிற்கில்
ஒண்பொருள் காணும் பண்பினுக் கொருகாற்
பரிதியும் மதியும் எரிதரு விளக்கும்
வேண்ட லின்றே காண்தகு காலை

வந்த வேட்டுவாளியை நினைத்துக்கொண்டிருந்து அந்த வேட்டுவாளியான
தன்மைபோலச் சிவனுடைய ஞானம் கைக்கொள்ளப்பட்டிருக்கிற உயிரும்
அந்தச் சிவனையே தியானம்பண்ணித் தான் அந்தச் சிவனுடைய சொரூபமாகி;
ஐவகைத் தொழிலும் மெய்வகை உணர்வும் பிரியாவாறு பெற்றுத் திரியாப்
பெரியோர் திரட்சி சேர்ந்திடுமே வேட்டுவாளியான புழு அந்த வேட்டுவாளி
செய்துவந்த தொழிலெல்லாம் தானும் செய்து வேட்டுவாளியினுடைய சொரூபம்
நீங்காமல் முன்புள்ள வேட்டுவாளிகளுடைய கூட்டத்தோடும் கூடியிருந்த
தன்மைபோல, இந்த ஆன்மாவும் சிவனுடைய பஞ்சகிருத்தியத்தையும்
சர்வக்கியத்துவத்தையும் இரண்டுந் தன்னைவிட்டு நீங்காதவாறு பெற்று,
முன்னே இந்த அறிவு தொழில் இரண்டையும் பெற்று நீங்காமலிருக்கிற
பெரியோர்களது கூட்டத்தோடுஞ் சென்று கூடிநிற்கும்.                 11

      மேல் சங்கிராந்தவாதி மறுக்கிறான்:

     (உரை) சேர்ந்த மும்மை வாய்ந்த ஞானமும்-இங்ஙனங் கூடிவருகிற
பதி பசு பாசம் மூன்றினுக்கும் பொருந்தப்பட்ட மூன்றுவகைஞானமும்;
ஒருகாலன்றித் திரிவுற நிற்கில் - ஓரோர் அவதரத்திலே ஓரொன்று காரியப்
படுமதொழிந்து மூன்றுவகை ஞானமும் ஒக்கக்கூடிநின்றே ஒருமுதல் காரியப்
பட்டவேண்டுமாயின்; ஒண்பொருள்காணும் பண்பினுக்கு ஒருகால் பரிதியும்
மதியும் எரிதரு விளக்கும் வேண்டலின்றே காண்தகு காலை - கண்ணானது
அழகிய பதார்த்தங்