| | ஒன்றொன் றாக நின்றறி வுறுமெனில் அன்னியம் அறியா மன்உயிர் பொறிபுலன் தானோ அறியா தலைவர்க் குலகினை ஆனா அறிவால் அறியவேண் டின்றே | | 10 | கொழுந்தழல் தகுமேல் அழுந்திடும் அவத்தையில் திரியாத் தலைவற் றெரியாத் தன்மைவந்து | களிலே ஒன்றைக் காணவேண்டின ஒழுங்கினுக்கு விசாரித்துப் பார்க்குமிடத்து ஆதித்தனாகுதல் சந்திரனாகுதல் நன்றாக எரிகிறவிளக்காகுதல் ஒன்று காட்டக் கண் காணுமதொழிந்து இவை மூன்றுங் கூடிநின்று காட்டக் கண் ஒன்றைக் காணவேண்டுவதில்லை; ஆகையால் மூன்றுவகை ஞானமுங் கூடிநின்றே ஆன்மா ஒன்றை அறிய வேண்டுமென்று நீ சொன்னது அர்த்த மன்று; ஒன்று ஒன்றாக நின்று அறிவுறும் எனில் அப்படியன்று காணும் ஓரொன்றாகத் தனித்தனியே நின்று நின்று ஓரொரு விஷயங்களை யறிந்து வாரா நிற்கு மென்று நீ சொல்லில்; அன்னியம் அறியா மன்னுயிர் - நிலைபெற்று வருகிற ஆன்மாவுக்கு விஷயங்கள் வேறாயிருக்கையினாலே பசு ஞானம் தானாக ஒரு விஷயங்களை அறியமாட்டாது; பொறிபுலன் தானோ அறியா - இந்திரியங்கள் சடமாயிருந்த படியாலே பாசஞானம் தானாக ஒரு விஷயங்களை அறிய மாட்டாது தலைவற்கு உலகினை ஆனா அறிவால் அறிய வேண்டின்றே - பதிஞானம் அனாதியே கெடாமலிருக்கிற பேரறிவாயிருக்கையினாலே கர்த்தாவுக்குப் பிரபஞ்ச விஷயங்களைப் புதிதாகச் சுட்டியறியவேண்டுவ தில்லை; கொழுந்தழல் தகுமேல் அழுந்திடும் அவத்தையில் - கருவிக ளெல்லாம் நீங்கி ஆணவமலத்தினாலே மறைக்கப்பட்டிருக்கிற அவத்தையில் ஆன்மா அறியாமல் கொழுந்துவிட் டெரியாமற்கிடக்கிற கொழுவிய தழலையொத் திருந்ததாமாயின்; திரியாத் தலைவற் றெரியாத் தன்மை வந்து எய்தலாகா - ஒருகாலத்திலும் இவனை விட்டு நீங்காமல் எப்பொழுதும் இவனோடு கூடி நிற்கிற கர்த்தாவை இவன் தெரியாமலிருக்கிற முறைமை வந்துண்டாகிறது இவனுக்கு ஆகாது, இது அவன் பெத்தத்தை மறுத்தது. |