| 15 | எய்தல் ஆகா மெய்யுறு பொருட்கு முன்னர்க் கீடந் தன்னென எடுத்த வேட்டுவன் இயல்பு கூட்டல் பெறாதே வண்டிறும் பெடாஉட் கொண்டது தனக்கு | | 20 | மந்திர வாதந் தந்ததும் இலதே எடுத்திடும் அதனால் அடுத்ததென் றறையிற் கருமயிர்க் குட்டி இருசிறைப் பறவை யாயின தெடுத்த தாயர்சாற் றிலரே பிறவிப் பேதத் துறையிவை கிடக்க | மெய்யுறு பொருட்கு முன்னர்க்கீடந் தன்னென எடுத்த வேட்டுவன் இயல்பு கூட்டல் பெறாதே - நீ சிவனோடேகூடி ஒன்றுபட்டிருக்கிற முத்தித்தன்மைக்கு முன்னே ஒன்று மறியாமற் கிடக்கிறபச்சைப் புழுவைத் தன்னுடைய சொரூபமாக வேணுமென்று சென்றெடுத்த வேட்டுவாளியினது இயல்பு உவமையாகக் கூட்டிச் சொல்லுகிறது பெறாது; வண்டு இறும்பு எடா உட்கொண்டு அது தனக்கு மந்திரவாதந் தந்ததும் இலதே - சிவன் இந்த ஆன்மாக்களுக்கு மந்திரவாதந் தந்ததும் இலதே - சிவன் இந்த ஆன்மாக்களுக்கு மந்திர வுபதேசங்களைச்செய்து தற்சொரூபமாக்கினாற்போல வேட்டுவாளி புழுவையெடுத்துக் கொண்டுபோய்த் தன்னுடைய கூட்டுக்குள்ளே வைத்து ஒரு மந்திர உபதேசங்களைச்செய்து தற்சொரூபமாக்கினதாகச் சொல்லப்படாது. ஆகையால் நீ வேட்டுவாளியையும் புழுவையும் முத்திக்கு உவமை சொன்னது அர்த்தமாகாது; எடுத்திடும் அதனால் அடுத்ததென்று அறையில்-அப்படியன்றுகாணும், அந்த வேட்டுவாளிசென்று எடுத்துதான் உபதேசமாக அந்தப் புழு தற்சொரூபமானதென்று நீ சொல்லில்; கருமயிர்க் குட்டி இருசிறைப்பறவையாயினது எடுத்த தாயர் சாற்றிலரே - கருமை பொருந்தியிருக்கிற மயிர்க்குட்டிப் புழுவானது தனது வாயில் நூலாலே கூடுகட்டி அதற்குள்ளே யிருந்து சிலநாட்சென்ற பிறகு பெரிய சிறகினை யுடைய பறவையாய்ப் பறந்துபோன இதற்கு ஒரு தாயார் வந்தெடுத்து அது உபதேசமாக இது பறவையானதென்று ஒருத்தர் சொல்லுவாரில்லை. ஆகையால்; பிறவிப் பேதத்துறை இவை கிடக்க-புழு வேட்டுவாளியானதும் மயிர்க்குட்டி பறவையானதும் கன்மத்துக்கீடாக அச்சுமாறிப்போனது, முத்திக்கு உவமையாகாது. ஆகையால் |