என்னும் அசுரர்கள் ; எருக்கந்தூண்களும் வெங்கலக்கதவும் பவழத் தூண்களும் கொண்டு பைரவ உபாசனையுடன் ஆட்சி செய்து வந்தனர். (இவர்களே காஞ்சியில் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபட்டு) பேறு பெற்றவர்கள். அத்திருக்கோயிலே ஓணகாந்தன்தளி ஆகும்.) இவர்களைக்காணத் தொண்டைமான் வந்தான். வரும் வழியில் ‘கோழம்பேடு’ என்னும் கிராமத்தில் தங்கி இரவு உறங்கும்போது வெங்கல மணியோசை கேட்டது. அங்குச் சிவத்தலம் இருக்கவேண்டும் என்றறிந்து, மன்னன் மறுநாள் காலை யானை மீதேறிவந்தான். அவன் வருவதைக்கண்ட அசுரர்களின் குறுநில மன்னன் ஒருவன் தன் சேனைகளுடன் வந்து தொண்டைமானை எதிர்க்கலானான். தனியே வந்த தொண்டைமான், போர் செய்வதற்குச் சேனைகளைக்கொண்டு வரத்திரும்பினான். அவ்வாறு திரும்பி இம் முல்லைப்புதர் வழியாக வரும்போது, யானையின் கால்களில் முல்லைக்கொடிகள் சுற்றிக் கொள்ள, மன்னன் யானைமீதிருந்தவாறே தன் உடைவாளால் வெட்ட, ரத்தம் வெளிப்பட்டது. திகைத்த மன்னன் கீழிறங்கிப் பார்க்க அங்குச் சிவலிங்கத் திருமேனி இருப்பதைக் கண்டான். தன் பிழைக்கு வருந்தி, அவ்வாளால் தன்னை மாய்த்துக் கொள்ள முயன்றான். அப்போது இறைவன் காட்சி தந்து, “மன்னனே ! வெட்டுப்பட்டாலும் குற்றமில்லை, நான் மாசு இல்லா மணியே ! வருந்தற்க, நந்தியை உனக்குத் துணையாக அனுப்புகிறேன். வெற்றிபெற்று வருவாயாக” என்று அருள் புரிந்தார். (இதனால்தான் இத்தலத்தில் நந்தி கிழக்குநோக்கியுள்ளது). தொண்டைமான் (நந்தியெம்பெருமானுடன்) வருவதை யறிந்து, ஓணன், காந்தன் சரணடைந்தனர். அவர்களிடமிருந்து மன்னன் எடுத்து வந்த எருக்கத் தூண்களே இன்றும் சுவாமி சந்நிதியின் முன்னால் உள்ளன. வெங்கலக்கதவும், பவழத்தூண்களும் திருவொற்றியூரில் வைக்கப் பட்டதாகவும் அவை காலப்போக்கில் வெள்ளத்தின் வாய்ப்பட்டதாகவும் சொல்லப்படுகின்றது. இறைவன் - நிர்மலமணீஸ்வரர், பாசுபதேஸ்வரர், மாசிலாமணீஸ்வரர் இறைவி - லதாமத்யாம்பாள், கொடையிடைநாயகி, கொடியிடையம்மை தலமரம் - முல்லை. (வெளிச்சுற்றில் நந்தியின் பக்கத்தில் உள்ளது) |