மாசி மாதத்தில் பெருவிழா பதின்மூன்று நாள்களுக்கு நடைபெறுகிறது. மாதாந்திர உற்சவங்களும் நடைபெறுகின்றன. “வடிவுடை மழுவேந்தி மதகரியுரி போர்த்துப் பொடியணி திருமேனிப் புரிகுழல் உமையோடும் கொடியணி நெடுமாடக் கூடலை யாற்றூரில் அடிகள் இவ்வழிபோந்த அதிசயம் அறியேனே.” (சுந்தரர்) -“நீங்காது நீடலையாற்றூர் நிழல்மணிக் குன்றோங்குதிருக் கூடலை யாற்றூர்க் குணநிதியே” (அருட்பா) அஞ்சல் முகவரி :- அ/மி. நர்த்தனவல்லபேஸ்வரர்- நெறிகாட்டுநாதர் திருக்கோயில் திருக்கூடலையாற்றூர் காவாலகுடி அஞ்சல் - 608 702. காட்டுமன்னார்கோயில் வட்டம் - கடலூர் மாவட்டம். 36/4. திருஎருக்கத்தம்புலியூர். ராஜேந்திரப்பட்டணம். | நடுநாட்டுத் தலம். மக்கள் வழக்கில் ராஜேந்திரப் பட்டணம் என்று வழங்குகிறது. வியாக்ரபாதர் (புலிக்கால் முனிவர்) பூசித்த தலங்கள் ‘புலியூர்’ என்ற பெயருடன் விளங்குகின்றன. அவற்றுள் இத்தலமும் ஒன்று. ஏனையவை :- (1) பெரும்பற்றப்புலியூர் (சிதம்பரம் - தென்புலியூர்) (2) திருப்பாதிரிப்புலியூர் (வடபுலியூர்) (3) ஓமாம்புலியூர் (4) பெரும்புலியூர். 1. விருத்தாசலம் - ஜயங்கொண்டம் பேருந்துச் சாலையில் உள்ள தலம். தலம்-11 |