பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 165


பஞ்சமுக வாத்யம் வாசிப்பது போலவும், சிறிய மூர்த்தங்கள் உள்ளன.
மூலவர் தரிசனம் இடப்பால், சுயம்புத் திருமேனி. பாணம் சற்று
கூர்மையாகவுள்ளது. சதுரபீடஆவுடையார் - இருபுறமும் வழித்தெடுத்தாற்
போலவுள்ளது. நவக்கிரக சந்நிதி உள்ளது.

     கோஷ்ட மூர்த்தங்களாக நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி,
இலிங்கோற்பவர் - பிரம்மா, விஷ்ணு பக்கங்களில் நின்று தரிசிக்கும்
அமைப்பில், பிரம்மா, துர்க்கை ஆகிய மூர்த்தங்கள் உள்ளன. சண்டேசுவரர்
சந்நிதி உள்ளது. கோயிற் சுவரில் தலவரலாற்றுச் சிற்பங்கள் உள.
கோயிலுக்குப் பக்கத்தில் உள்ள சத்திரம் வேத பாராயண சத்திரம் - உற்சவ
காலத்தில் வேதபாராயணம் செய்யும் கட்டளைக்காக ஏற்படுத்தப்பட்டது.
இப்போது நடைபெறவில்லை.

     நாடொறும் நான்கு கால பூசைகள் நடைபெறுகின்றன. மாதாந்திரக்
கட்டளைகள் உள்ளன. ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ
ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அவர்களின் பொன்விழாத் திருப்பணித்
திட்டத்தின்கீழ் இக்கோயில் சுவாமி, அம்பாள், விநாயகர், முருகன்
விமானங்கள் திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளன. ஊர் மக்கள் ஆதரவால்
பிற திருப்பணிகள் நடைபெறுகின்றன.

     அண்மையிலுள்ள திருமுறைத்தலம் திருச்சோபுரம்.

     “நீறுதாங்கிய திருநுதலானை
           நெற்றிக் கண்ணனை நிரைவளைமடந்தை
      கூறுதாங்கிய கொள்கையினானைக்
           குற்றமில்லியைக் கற்றையஞ் சடைமேல்
      ஆறுதாங்கிய அழகனை அமரர்க்கு
           அரியசோதியை வரிவரால் உகளும்
      சேறுதாங்கிய திருத்தனை நகருள்
           சிவக்கொழுந்தினைச் சென்றடைமனனே.”     (சுந்தரர்)

                                      -“நம்புவிடை
     ஆங்குந்தினை யூர்ந்தருளாய் என்றன்பர்தொழு
     தோங்குந் தினையூர் உமாபதியே.”              (அருட்பா)


அஞ்சல் முகவரி :-

    அ/மி. சிவக்கொழுந்தீசர் திருக்கோயில்
     தீர்த்தனகிரி & அஞ்சல் - 608 801.
     கடலூர் வட்டம் - கடலூர் மாவட்டம்