பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 241


                                          “- மாயமிகும்
     வாட்களமுற்றாங்குவிழி மாதர்மய லற்றவர்சூழ்
     வேட்களமுற்றோங்கும் விழுப்பொருளே.”      (அருட்பா)

அஞ்சல் முகவரி :-

    அ/மி. பாசுபதேஸ்வரர் திருக்கோயில்
     திருவேட்களம்
     அண்ணாமலைநகர் அஞ்சல் - சிதம்பரம்
     சிதம்பரம் வட்டம், கடலூர் மாவட்டம் - 608 002.
 

57/3. திருநெல்வாயில்

சிவபுரி

     சோழநாட்டு (வடகரை)த் தலம்.

     தற்போது மக்கள் வழக்கில் சிவபுரி என்று வழங்குகிறது.
திருவேட்களத்திற்குப் பக்கத்தில் உள்ளது.

     சிதம்பரத்திலிருந்து அண்ணாமலை நகர் சாலையில் வந்து, பல்கலைக்
கழகத்திற்குள் நுழையாமல் வலப்புறமாகத் திரும்பி கவரப்பட்டு சாலையில்
சென்று, அது மெயின் ரோடில் சேருமிடத்தில் (கவரப்பட்டு சாலை
இடப்புறமாகத் திரும்பிவிட) நாம் நேரே எதிர்ச்சாலையில் - பேராம்பட்டுச்
சாலையில் சென்றால் சிவபுரியை அடையலாம்.

     இறைவன் - உச்சி நாதேஸ்வரர், உச்சிநாத சுவாமி.
     இறைவி - கனகாம்பிகை.
     தலமரம் - நெல்லி.

     தீர்த்தம் - கோயிலின் எதிரில் உள்ளது.

     கண்வ மகரிஷி வழிபட்ட தலம். சம்பந்தர் பாடல் பெற்றது.
கிழக்கு நோக்கிய கோயில். எதிரில் நீராழி மண்டபத்துடன் குளம் உள்ளது.
ஐந்து நிலைகளுடன் காட்சி தரும் ராஜகோபுரத்தைக் கடந்து உட்சென்றால்
பிராகாரத்தில் விநாயகர் சந்நிதி. அடுத்து சுப்பிரமணியர்,

தலம் -16