-நல்லவர்கள் கண்காட்டு நெற்றிக் கடவுளே யென்றுதொழ வெண்காட்டின் மேவுகின்ற மெய்ப்பொருளே. (அருட்பா) அஞ்சல் முகவரி :- அ/மி. சுவேதாரண்யேஸ்வரர் திருக்கோயில் திருவெண்காடு & அஞ்சல் - சீர்காழி வட்டம் நாகப்பட்டினம் மாவட்டம் - 609 114. 66/12. கீழைத்திருக்காட்டுப் பள்ளி ஆரண்யேசுரர் கோயில் |  சோழநாட்டு (வடகரை)த் தலம். ஊர் - கீழைத்திருக்காட்டுப் பள்ளி. கோயில் - ஆரண்யேசுரர் கோயில். மக்கள் வழக்கில் ஊர்ப்பெயர் ‘கீழைத்திருக்காட்டுப்பள்ளி’ என்றே வழங்குகிறது. இத்தலம் திருவெண்காட்டிற்கும், இலைய முதுகுளபுரத்திற்கும் இடையில் உள்ளது. 1) திருவெண்காட்டிலிருந்து இலையமுதுகுளபுரம் செல்லும் சாலையில் 1 1/2 கி.மீ.ல் இத்தலம் உள்ளது. |