- பார்காட் டுருகாவூ ரெல்லாம் ஒளிநயக்க வோங்குங் குருகாவூர் வெள்ளடை யெங்கோவே. (அருட்பா) அஞ்சல் முகவரி :- அ/மி. வெள்ளடையீஸ்வரர் திருக்கோயில் திருக்கடாவூர் - வடகால் அஞ்சல் சீர்காழி வட்டம் - நாகப்பட்டினம் மாவட்டம். மயிலாடுதுறை RMS - 609 115. சோழநாட்டு (வடகரை)த் தலம். மக்கள் சீர்காழி என்றே வழங்குகின்றனர். சிதம்பரம் முதலிய பல ஊர்களிலிருந்தும் பேருந்து வசதிகள் உள்ளன. சிதம்பரத்தை யடுத்துள்ள தலம் - புகைவண்டி நிலையம். திருஞானசம்பந்தரின் அவதாரப்பதி - ஞானப்பாலுண்டு அற்புதங்கள் நிகழ்த்திய தலம். முருகன், காளி, பிரமன், திருமால், குரு, இந்திரன், சூரியன், சந்திரன், அக்கினி, ஆதிசேஷன், ராகு, கேது, வியாசர் முதலியோர் இறைவனை வழிபட்டுப் பேறு பெற்ற தலம். இத்தலத்திற்குப் பன்னிரண்டு பெயர்களுண்டு. 1. பிரமன் வழிபட்டதால் - பிரமபுரம். 2. இறைவன் மூங்கில் வடிவமாகத் தோன்றியதால் - வேணுபுரம். 3. சூரனுக்குப் பயந்த தேவர்களுக்குப் புகலிடமாக விளங்கிய தலமாதலின் - புகலி. 4. குருவான வியாழன் வழிபட்டு, குருத்துவம் பெற்றமையால் - வெங்குரு. 5. பிரளய காலத்தில் இறைவன் உமையோடு சுத்தமாயையைத் தோணியாகக் கொண்டு வந்து தங்கியிருந்ததால் தோணிபுரம். |