6. பூமியைப் பிளந்து சென்ற இரணியாக்கனைக் கொன்றவராக மூர்த்தி வழிபட்டதால் - பூந்தராய். 7. தலைக்கூறாகிய ராகு பூசித்ததால் - சிரபுரம். 8.புறா வடிவில் வந்த அக்கினியால் சிபி மன்னன் நற்கதியடைந்தமையால் - புறவம். 9. சண்பைப் புல்லால்மாய்ந்த தம்குலத்தோரால் வந்த பழி தன்னைப் பற்றாதிருக்க, கண்ணபிரான் (திருமால்) வழிபட்டதால் - சண்பை. 10. தில்லைப் பெருமானுடன் வாதாடிய குற்றம்போக, காளி இங்கு வந்து வழிபட்டதால் - ஸ்ரீகாளி (சீகாழி). 11. மச்சகந்தியைக்கூடிய கொச்சையாம் பழிச்சொல் நீங்கப் பராசரர் பூசித்ததால் - கொச்சை வயம். 12. மலத்தொகுதி நீங்குமாறு உரோமச முனிவர் வழிபட்டதால் கழுமலம் எனவும் பெயர் பெற்றது. கோயில் ஊர் நடுவே நான்கு கோபுர வாயில்களுடன் அழகுற விளங்குகிறது. கணநாத நாயனார் தொண்டுசெய்து வாழ்ந்த தலம். இறைவன் - பிரமபுரீஸ்வரர், தோணியப்பர், சட்டைநாதர். இறைவி - பெரியநாயகி, திருநிலைநாயகி. தலமரம் - பாரிசாதம். தீர்த்தம் - பிரம தீர்த்தம் முதலாகவுள்ள 22 தீர்த்தங்கள். பிரமதீர்த்தமே பிறவற்றினும் மேலானது. இக்கரையில்தான் ஞானசம்பந்தர், ஞானப்பாலையுண்டார். ‘திருமுலைப்பால்உற்சவம்’ இன்றும் சித்திரைப் பெருவிழாவில் இரண்டாம் நாள் விழாவாக நடைபெறுகின்றது. ‘திருமுலைப்பால் உண்டார் மறுமுலைப்பால் உண்ணார்’ என்பது இப்பகுதியில் சொல்லப்படும் மொழியாகும். இறைவன் திருமேனிகளுள் (1) அடிப்பாகத்திலுள்ள பிரமபுரீஸ்வரர் பிரமன் பூசித்தது - இலிங்கவடிவம். (2) இடைப்பகுதியிலுள்ள தோணியப்பர் (ஞானப்பால் தந்தவர்) குரு வடிவம். (3) சட்டை நாதர் சங்கமவடிவம் என்று சிறப்பித்துச் சொல்லப்படுகிறது. (மாவலியிடம் சென்று மண்கேட்டுப் பெற்ற மகாவிஷ்ணு, செருக்குற்றுத்திரிய ; வடுகநாதர் சென்று தம் திருக்கரத்தால் விஷ்ணுவை |