உலகமுதல்வி யன்பருள்ளத் துறைமுதல்வி யிறைவருட நிலவுமுதல்வி மாண்டவியர் நேர்ந்து நிறைந்த பீடத்தே அலகில் வளஞ்சேர் திருக்கண்ணார் கோயிலமர்ந்த அருள்முதல்வி இலகி முருகுவளர் கோதை இணையில்முதல்வி பதம்பணிவாம். -கள்ளிருக்கும் காவின் மருவுங் கனமுந்திசை மணக்குங் கோவின் மருவு கண்ணார் கோயிலாய். (அருட்பா) அஞ்சல் முகவரி :- அ/மி. கண்ணாயிரமுடையார் திருக்கோயில் குறுமாணக்குடி கொண்டத்தூர் - அஞ்சல் தரங்கம்பாடி - வட்டம் நாகப்பட்டினம் மாவட்டம் - 609 117. 72/18. திருக்கடைமுடி கீழையூர், கீழூர். | சோழநாட்டு (வடகரை)த் தலம். மக்கள் வழக்கில் கீழையூர் என்றும் கீழுர் என்றும் வழங்குகிறது. (கீழையூர் என்பது ஏழு ஊர்கள் சேர்த்து - மிகப் பெரிய ஊர். இதனால் இதற்கு ஏழுர் என்றும் பெயர் வழங்குகிறது.) (1) மயிலாடுதுறை - பூம்புகார்ச் சாலையில்; மேலையூர் மேலப்பாதி தாண்டி, கீழையூர் என்று பெயர்ப்பலகையுள்ள ஊரையும் கடந்து, சற்று மேலே சென்று, ‘சத்திரம் Stop’ என்னுமிடத்தில் கீழையூர் 2 கி.மீ. என்று கைகாட்டி உள்ள இடத்தில் அது காட்டும் பாதையில் சென்று, கீழையூர் பேருந்து நிற்குமிடத்தில் இடப்பால் திரும்பிச் சென்றால் கோயிலை அடையலாம். (திருச்சென்னம்பூண்டி - என்னும் ஊரே கல்வெட்டின்படி கடைமுடி என்பர் ஆய்வர்.) இறைவன் - கடைமுடிநாதர், அந்திசம்ரக்ஷணீஸ்வரர் இறைவி - அபிராமி |