பக்கம் எண் :

30 திருமுறைத்தலங்கள்


  என்நெஞ்சே உன்னை இரந்தும் உரைக்கின்றேன்
  கன்னஞ் செய்வாயாகில் காலத்தால் - வன்னெஞ்சேய்
  மாகம்பத்தானை யுரித்தானை வண்கச்சி
  ஏகம்பத்தானை இறைஞ்சு.
                                   (க்ஷேத்திரத் திருவெண்பா),
                                   (ஐயடிகள் காடவர்கோன்)

  பங்கயச் செங்கைத் தளிரால் பனிமலர் கொண்டருச்சித்துச்
  செங்கயற் கண்மலைவல்லி பணிந்த சேவடி நினைந்து
  பொங்கிய அன்பொடு பரவிப் போற்றி ஆரூரர்க்கு
  மங்கை தழுவக் குழைந்தார் மறைந்த இடக்கண் கொடுத்தார்.
                                             (பெ. புரா)

     “அற்றைக் கிரைதேடி
          அத்தத்திலு மாசை
     பற்றித் தவியாத
          பற்றைப் பெறுவேனோ
     வெற்றிக் கதிர்வேலா
          வெற்பைத் தொளைசீலா
     கற்றுற்றுணர் போதா
          கச்சிப் பெருமாளே”
                                 (திருப்புகழ்)

  “நாகம்பராந் தொண்டை நாட்டிலுயர் காஞ்சி.
  ஏகம்பமேவும் பேரின்பமே”         (அருட்பா : விண்.கலி.வெ)

  தொல்லை மறைதேர் துணைவன் பல்லாண்டு வரை
  எல்லையிருநாழி நெற்கொண்டோர் - மெல்லியலாள்
  ஓங்குலகில் வாழும் உயிரனைத்தும் ஊட்டுமால்
  ஏங்கொலிநீர்க் காஞ்சியிடை.
                         (தண்டியலங்கார மேற்கோள் பாடல்)

அஞ்சல் முகவரி :-
  அருள்மிகு. ஏகாம்பரநாதர் திருக்கோயில்
  காஞ்சிபுரம் - 631 502.
  காஞ்சிபுரம் மாவட்டம்.