2. திருக்கச்சி மேற்றளி திருமேற்றளீஸ்வரர் கோயில், பிள்ளையார்பாளையம், காஞ்சிபுரம். | தொண்டை நாட்டுத் தலம். காஞ்சிபுரத்தில் உள்ள திருமுறைத் தலங்கள் ஐந்தினுள் இதுவும் ஒன்று. காஞ்சியில் ‘பிள்ளையார்பாளையம்’ என்னும் பகுதியில் இக்கோயில் உள்ளது. இதன் பெயரால் அவ்வீதி திருமேற்றளித் தெரு என்று வழங்கப்படுகிறது. திருமால் தவமிருந்து, சிவ சாரூபம் பெற்ற வரலாற்றுச் சிறப்புடையது. இறைவன் - திருமேற்றளீஸ்வரர், திருமேற்றளிநாதர் இறைவி - திருமேற்றளிநாயகி அப்பர், சுந்தரர் ஆகியோரின் பாடல் பெற்ற பதி. இத்தெருவில் கீழ்க்கோடியில் திருஞானசம்பந்தரின் ஆலயம் உள்ளது. மிகச்சிறிய கோயில். ஞானசம்பந்தர் சந்நிதி மட்டுமே உள்ளது. மூலத்திருமேனி திருமேற்றளிக் கோபுரத்தை நோக்கியவாறு கைகளைக் குவித்து வணங்கும் நிலையில் நின்ற கோலத்தில் உள்ளது. உற்சவத் திருமேனி ; வலக்கை சுட்டிய விரலுடன் இடக்கையில் பொற்கிண்ணம் ஏந்திய நிலையில் பக்கத்தில் உள்ளது. இத்தெருவின் நடுவில் இடப்பால் ‘உற்றுக்கேட்ட முத்தீசர்’ ஆலயம் உள்ளது. ஞானசம்பந்தர் பாடியபோது சிவபெருமான் அருகில் இருந்து கேட்பதற்காக இங்கு அமர்ந்ததாகவும் - கேட்டதாகவும் வரலாறு. வீதியின் மேற்கோடியில் திருமேற்றளிக் கோயில் உள்ளது. இப்பகுதியில் நூற்றெட்டு ருத்ரர்கள் பூசித்ததாகச் செய்தியொன்று சொல்லப்படுகிறது. அதற்கேற்ப ஆனந்த ருத்ரேசம், மகா ருத்ரேசம் முதலிய பெயர்களில் இப்பகுதியில் கோயில்கள் உள்ளன. திருமால் சிவ சாரூப நிலையைப் பெற வேண்டி இறைவனை வழிபட்ட திருத்தலம். இறைவன் காட்சி தந்து நின்றபோது திருமால் சிவசாரூப நிலையை வேண்ட, ஞானசம்பந்தர் இங்கு வருகைதந்து பதிகம் பாடும்போது அது கிடைக்கும் என்றும், அதுவரை இங்கிருந்து தவஞ்செய்யுமாறும் இறைவன் வரமளித்தார். அதன்படியே |