ஞானசம்பந்தர் வந்து பாடியபோது திருமால் சிவசாரூபம் பெற்றார் என்பது தலவரலாறு. இறைவன் - மேற்றளிநாதர். சந்நிதி மேற்கு நோக்கியது. தற்போது இச்சந்நிதி பிரசித்தமாக மக்களுக்குத் தெரியவில்லை. உள்ளே உள்ள (கர்ப்பக்கிருகத்துள்) சந்நிதி ‘ஓத உருகீசர்’ என்று வழங்கப்படுகின்றது. ஞானசம்பந்தரின் பாடலைக் கேட்டு உருகியவர் (திருமால்) இவர் எனப்படுகிறது. இதற்கு அடையாளமாகச் சிவலிங்கத் திருமேனியின் முன்பு இருதிருவடிகள் உள்ளன. இச்சந்நிதி கிழக்கு நோக்கியது. ராஜகோபுரம் மூன்று நிலைகளுடன் கிழக்கு நோக்கிக் காட்சி தருகிறது. துவார கணபதி ஒருபுறமும் மறுபுறம் முருகப்பெருமானும் உள்ளனர். உள்ளே நுழைந்தால் விசாலமான இடம். முன்னே சென்றால் நந்தி, பலிபீடம் உள்ளன. வலப்பால் நவக்கிரக சந்நிதி உள்ளது. அடுத்துத் தனிக்கோயிலாக விளங்குவது மேற்றளிநாதர் சந்நிதியாகும் - மேற்கு நோக்கிய சந்நிதி. கோஷ்ட மூர்த்தங்களாக ஒருபுறத்தில் விநாயகர், தக்ஷிணாமூர்த்தி ஆகிய திருவுருவங்களே உள்ளன. மறுபுறத்தில் எவையுமில்லை. மிகச்சிறிய சந்நிதி. இடப்பால் அம்பால் (மூலத் திருவுருவம்) சந்நிதி உள்ளது. நின்ற கோலம். காஞ்சி மண்டலம் முழுமைக்கும் அம்பாள் காமாட்சியேயாதலின் இம்மூர்த்தம் பிற்காலப் பிரதிஷ்டையாகும். அம்பாள் சந்நிதிக்குப் பக்கத்தில் உள்ளது சிறிய (இடம்) மண்டபம் - இங்குத் தான் அ/மி. கச்சபேசர் திருக்கோயில் பெருவிழாவின்போது 5ஆம் நாளில் அம்பாளை எழுந்தருளச் செய்து, அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு, வீதியுலா நிகழும். அம்பாள் சந்நிதியின் முன்பு சிமெண்டு பலகையாலான மண்டபம் போடப்பட்டுள்ளது. தலப்பதிகமும் சுவரில் பதிக்கப்பட்டுள்ளது. அடுத்து இடப்புறம் நால்வர் சந்நிதி. இது சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன் செய்யப்பட்டுள்ள பிரதிஷ்டை என்று சொல்லப்படுகிறது. வாயிலைக்கடந்து உள்நுழைந்து பிராகார வலமாக வரும் போது விநாயகர் சந்நிதி, சுப்பிரமணியர் சந்நிதி, காசிவிசுவநாதர், பைரவர் சந்நிதிகள் முதலியன உள்ளன. வலம்முடித்துப் பக்கவாயில் வழியாக உள்நுழைந்தால் எதிரில் நடராசசபை உள்ளது. இங்கு நடராச வடிவம் சுவரில் வண்ணத்தில் எழுதப்பட்டுள்ளது. இங்கிருந்த திருமேனி, இவ்வினத்தாருக்குரிய கோயிலான அ/மி. கச்சபேசர் திருக்கோயிலில் கொண்டுபோய் வைக்கப்பட்டுள்ளதாகச் செவி வழிச்செய்தி சொல்லப்படுகிறது. இவ்விடத்தில் சந்திரசேகரர், விநாயகர், முருகன், வள்ளி, தெய்வயானை முதலிய உற்சவத் திருமேனிகள் பாதுகாத்து |