வைக்கப் பட்டுள்ளன. இடப்பால் திரும்பி உள் சென்றால் ஓதஉருகீசர் சந்நிதி - பெரிய சிவலிங்கத் திருமேனி. ஆவுடையாருக்கு எதிரில் கீழே இரு திருவடிகள் உள்ளன- கிழக்கு நோக்கிய சந்நிதி. கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, திருமால், பிரமன், துர்க்கை ஆகியோர் உள்ளனர். சண்டேசுவரர் சந்நிதி உள்ளது. கோயிலுக்குப் பக்கத்தில் வெட்ட வெளியில் ஜேஷ்டாதேவியின் திருவுருவம் உள்ளது. பாதுகாப்புச் சுவர் மட்டுமே தாழ உள்ளது. இவ்வுருவத்தின் மேற்புறம் காகம், ஆடு முதலிய உருவங்களும் உள் ஒருகை பூதமொன்றின்மீது வைத்தும் உள்ளன. நின்ற நிலை உருவம். சம்புவராயர், விஜயநகர மன்னர்கள், பல்லவ அரசர்கள் காலக் கல்வெட்டுக்களில் இப்பகுதிகளில் வாழ்ந்த செங்குந்தர்களிடம் தறி ஒன்றுக்கு ஐந்தரை பணம் வசூலித்தது, இங்குள்ள ஒரு தெருவுக்கு ‘ஏகம்பன் தெரு’ என்று பெயரிட்டது முதலிய செய்திகள் காணப்படுகின்றன. “செல்வியைப் பாகங்கொண்டார் சேந்தனை மகனாக்கொண்டார் மல்லிகைக் கண்ணியோடு மாமலர்க் கொன்றைசூடிக் கல்வியைக் கரையிலாத காஞ்சி மாநகர் தன்னுள்ளால் எல்லியை விளங்க நின்றார் இலங்கு மேற்றளியனாரே” (அப்பர்) “நொந்தா ஒண்சுடரே நுனையே நினைந்திருந்தேன் வந்தாய் போயறியாய் மனமே புகுந்து நின்ற சிந்தாய் எந்தைபிரான் திருமேற்றளி உறையும் எந்தாய் உன்னையல்லால் இனி ஏத்தமாட்டேன்” (சுந்தரர்) - ஆகுந்தென் “காற்றளிவண் பூ மணத்தைக் காட்டும் பொழிற்கச்சி மேற்றளிவாழ் ஆனந்த வீட்டுறவே” (அருட்பா) அஞ்சல் முகவரி :- அ/மி. திருமேற்றளீசுவரர் திருக்கோயில், திருமேற்றளித்தெரு பிள்ளையார்பாளையம் - காஞ்சிபுரம் - 631 501. காஞ்சிபுரம் மாவட்டம் தலம்-3 |