ராஜகோபுரம் மூன்று நிலைகளுடன் மேற்கு நோக்கியுள்ளது. கொடிமரமில்லை. பழமையான கோயில். வெளிப் பிராகாரத்தில் பைரவர், சனிபகவான், சூரியன், விநாயகர் மூர்த்தங்கள் உள்ளன. முன்மண்டபத்தில் விநாயகர், சுப்பிரமணியர், மகாலட்சுமி சந்நிதிகள். வாயில் கடந்தால் இடப்பால் அம்பாள் சந்நிதி. நேரே மூலவர் தரிசனம். பல்லாண்டுகளாகக் கும்பாபிஷேகம் நடைபெறவில்லை. “மத்த யானையேறி மன்னர்சூழ வருவீர்காள் செத்த போதிலாருமில்லை சிந்தையுள் வைம்மின்கள் வைத்த வுள்ளமாற்ற வேண்டா வம்மின் மனத்தீரே அத்தர் கோயில் எதிர்கொள்பாடி என்பது அடைவோமே” (சுந்தரர்)
-சூழ்வுற்றோர் விண்ணெதிர் கொண்டிந்திரன் போன்மேவி நெடுநாள்வாழப் பண்எதிர்கொள் பாடிப் பரம் பொருளே. (அருட்பா) அஞ்சல் முகவரி :- அ/மி. ஐராவதேஸ்வரர் திருக்கோயில் மேலைத் திருமணஞ்சேரி, திருமணஞ்சேரி அஞ்சல் - 609 813 குத்தாலம் S.O. மயிலாடுதுறை வட்டம் நாகப்பட்டினம் மாவட்டம். தலம்- 20 |