பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 317


                                    - மிக்கதிரு
   மாவளருஞ் செந்தாமரை வளருஞ்செய் குரக்குக்
   கா வளரும் இன்பக்கன சுகமே             (அருட்பா)


அஞ்சல் முகவரி:-


    அ/மி. குந்தளேஸ்வரர் திருக்கோயில்
  திருக்குரக்காவல் - இளந்தோப்பு அஞ்சல் - 609 201
  மயிலாடுதுறை வட்டம் - நாகப்பட்டினம் மாவட்டம்.
 

83/29. திருவாழ்கொளிப்புத்தூர்

திருவாளப்புத்தூர்,
வாளொளிப்புத்தூர்.

     சோழநாட்டு (வடகரை)த் தலம்.

     தேவாரத்தில் இத்தலம் வாழ்கொளிப்புத்தூர் என்றும், தலபுராணத்தில்
வாளொளிப்புற்றூர் என்றும் ; மக்கள் வழக்கில் திருவாளப்புத்தூர் என்றும்
வழங்கப்பெறுகிறது.

     1) வைத்தீஸ்வரன்கோயில் - திருப்பனந்தாள் சாலையில், இளந்தோப்பு
தாண்டி, மேலும் சென்றால் சாலையில் உள்ள வாளொளிப்புத்தூரை
அடையலாம். ஊரில் இடப்புறமாகச் செல்லும் பாதையில் சென்று
கோடியிலுள்ள கோயிலை அடையலாம்.

     2) மயிலாடுதுறை - மணல்மேடு பேருந்தில் சென்று இவ்வூரை
யடையலாம்.


     அர்ச்சுனன் தீர்த்தயாத்திரையில் இங்கு வந்தபோது நீர்வேட்கை
மிகுந்தது. இறைவன் முதியவர் உருவில் வந்து ஒரு கதையைத் தந்து, வாகை
மரம் ஒன்றினடியில் அதையூன்றி, வெளிப்படும் நீரைப் பருகுமாறு கூறினார்.
அருச்சுனன் தன்கையிலிருந்த வாளை அவரிடம் தந்து, தான் நீர்பருகிவிட்டு
வரும்வரை பாதுகாத்துத் தருமாறு கூறிச் சென்றான். இறைவன் அவன் தந்த
வாளை அம்மரப் புற்றில் ஒளித்து வைத்து மறைந்தார். நீர் பருகித் திரும்பிய
அர்ச்சுனன், இறைவனிடம் முறையிட அவரும் அதை வெளிப்படுத்தித் தந்து
அருள்புரிந்தார் என்பது தலவரலாறு. இதனால் இத்தலம் வாள்ஒளி புற்றூர்
ஆயிற்று