தனியார் ஒருவருக்குச் சொந்தமான இக் கோயில் பல்லாண்டுகளாகத் திருப்பணிகள் செய்யப்படாமல், பெரும் பகுதி சிதைந்திருந்தது. இப்போது தான் காலம் கனிந்து திருப்பணிகள் செய்யப்பட்டு வருகின்றன. விரைவில் கும்பாபிஷேகம் நடைபெறவேண்டும் என்பதே நம்பிரார்த்தனை. குருக்கள் 3 கி.மீ. தொலைவிலுள்ள குஞ்சமேடு கிராமத்திலிருந்து வந்து பூஜை செய்கிறார். ‘அருமணியை முத்தினை ஆன்அஞ்சும் ஆடும் அமரர்கள்தம் பெருமானை அருமறையின் பொருளைத் திருமணியைத் தீங்கரும்பின் ஊறலிருந் தேனைத் தெரிவரிய மாமணியைத் திகழ்தரு செம்பொன்னைக் குருமணிகள் கொழித்திழிந்து சுழிந்திழியுந் திரைவாய்க் கோல்வளையார் குடைந்தாடும் கொள்ளிடத்தின் கரைமேல் கருமணிகள் போல்நீலம் மலர்கின்ற கழனிக் கானாட்டு முள்ளூரிற் கண்டு தொழுதேனே.’ (சுந்தரர்) - நேமார்ந்த வானாட்டு முள்ளூர் மருவுகின்றோர் போற்று திருக் கானாட்டு முள்ளூ ர்க் கலைக்கடலே. (அருட்பா) அஞ்சல் முகவரி : - அ/மி. பதஞ்சலிநாதர் திருக்கோயில் கானாட்டம்புலியூர் - முட்டம் அஞ்சல் - 608 306 (வழி) ஆயங்குடி காட்டுமன்னார்குடி வட்டம் - கடலூர் மாவட்டம். |