பக்கம் எண் :

348 திருமுறைத்தலங்கள்


மற்றது ஆருத்ராவிலும் உலாவருமாம். வாயிலைக் கடந்தால் நேரே மூலவர்
தரிசனம்.

     மூலவர் - நீண்டுயர்ந்த பாணம். உற்சவ மூர்த்தங்களுள் சந்திரசேகரர்,
மயில்வாகனர், நால்வர், பிரதோஷ நாயகர் முதலியவை சிறப்பானவை.
கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, ரிஷபாரூடர், பிரம்மா, துர்க்கைத்
திருவுருவங்கள். உடலில் வியாதியுள்ளவர்கள் இங்கு வந்து கார்த்திகை முதல்
ஞாயிறு தொடங்கி 11 ஞாயிற்றுக்கிழமைகளில் இங்குள்ள வெள்ளெருக்கு
இலையில் தயிர்சாதம் சுவாமிக்கு நிவேதனம் செய்து சாப்பிட்டு வந்தால்
வியாதியிலிருந்து நீங்கப் பெறுவர் என்பது வரலாறு. இன்றும் பலர் அவ்வாறு
செய்து குணமடைந்து வருகிறார்கள்.

     1919ல் கும்பாபிஷேகம் நடந்துள்ளது. அதற்குப் பிறகு தற்போது
ராஜகோபுரத் திருப்பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

    “சீரினார்மணியும் அகில்சாந்தும் செறிவரை
     வாரிநீர் வருபொன்னி வடமங்கலக்குடி
     நீரின் மாமுனிவன் நெடுங்கை கொடுநீர்தனைப்
     பூரித்து ஆட்டிஅர்ச்சிக்க இருந்த புராணனே !”.     (சம்பந்தர்)

     “செல்வ மல்கு திருமங்கலக்குடி
      செல்வ மல்குசிவ நியமத்தராய்ச்
      செல்வ மல்கு செழுமறையோர் தொழ
      செல்வன் தேவியொடும் திகழ் கோயிலே.”      (அப்பர்)
           
                                         -ஓடிக்
     கருமங்கலக்குடியிற் காண்டு மெனவோதுந்
     திருமங்கலக் குடியிற்றேனே.      (அருட்பா)

அஞ்சல் முகவரி :-

    அ/மி. பிராணவரதேஸ்வரர் திருக்கோயில்
     திருமங்கலக்குடி - அஞ்சல் - 612 102.
     திருவிடைமருதூர் வட்டம் - தஞ்சை மாவட்டம்.