பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 381


     “குந்தி நடந்து குனிந்தொரு கைகோலூன்றி
      நொந்திருமி நுரைத்தேறி - வந்துந்தி
      ஐயாறு வாயாறு பாயா முன் நெஞ்சமே
      ஐயாறு வாயால் அழை.”
                                (ஐயடிகள் காடவர் கோமான்)
 
                                      - பண்பகன்ற
     வெய்யாற்றில் நின்றவரை மெய்யாற்றில் ஏற்று திரு
     வையாற்றின் மேவிய என் ஆதரவே.              (அருட்பா)

அஞ்சல் முகவரி :-

   
அ/மி. பஞ்சநதேஸ்வரர் திருக்கோயில்
    திருவையாறு - அஞ்சல் 613 204.
    திருவையாறு வட்டம் தஞ்சை மாவட்டம்.

106/52. திருநெய்த்தானம்

தில்லைஸ்தானம்

     சோழநாட்டு (வடகரை)த் தலம்.

     திருவையாற்றுக்கு மிக அருகாமையில் உள்ளது. திருவையாற்றை
மையமாகக் கொண்ட சப்தஸ்தானத் தலங்களுள் இதுவும் ஒன்று. மக்கள்
வழக்கில் தில்லைஸ்தானம் எனப்படுகிறது.

     சரசுவதி, காமதேனு, கௌதமமுனிவர் ஆகியோர் வழிபட்ட தலம்.
இங்கு இறைவனுக்குப் பசுநெய் அபிஷேகம் விசேஷமானது.

     இறைவன் - நெய்யாடியப்பர் கிருதபுரீஸ்வரர்.
   
 இறைவி - பாலாம்பிகை

     சம்பந்தர், அப்பர் ஆகியோர் பாடல் பெற்றது.

     கிழக்கு நோக்கிய ராஜகோபுரம். முதற்பிராகாரம் விசாலமானது.
அம்பாள் கோயில், தனிக்கோயிலாகத் தெற்கு நோக்கியுள்ளது. உள்
பிராகாரத்தில் விநாயகர், முருகன் சந்நிதிகள் உள்ளன. கோஷ்ட
மூர்த்தங்களாகத் தட்சிணாமூர்த்தி லிங்கோற்பவர், பிரம்மா ஆகியோர்
மூர்த்தங்கள் உள்ளன. மூலவர் நெய்யாடியப்பர். சிறந்த மூர்த்தம்